யாழ் மின்சார சபை வீதியிலுள்ள ஞானம்ஸ் ஹோட்டலின் செயற்பாடுகள் 24 வருடங்களின் பின்னர் மீண்டு ம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இந்த ஹோட்டலைத் திறந்ததாக பலாலி இராணுவ ஊடகப் பிரிவு செவ்வாய்க்கிழமை (3.5.2011) அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக 1987ம் ஆண்டு முதல் ஞானம்ஸ் ஹோட்டலின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இலங்கை இராணுவத்தினரின் 512 ஆவது படைப்பிரிவினரின் பாவனையில் இருந்த இந்க் ஹோட்டல் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. ஞானம்ஸ் ஹோட்டல் கடந்த ஜூன் மாதம் அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் பிரபல உல்லாச விடுதிகளில் ஒன்றான சுபாஸ் ஹோட்டலை மார்ச் மாதம் 17ம் திகதி அதன் உரிமையாளரான ஹரிகரனிடம் இராணுவத்தினர் கையளித்திருந்தனர். அத்துடன் இந்த விடுதி அமைந்திருந்த விக்டோறியா வீதியும் பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க சுபாஸ் விடுதியை உத்தியோகபூர்வமாக அதன் உரிமையாளர் எஸ்.ஹரிகரனிடம் கையளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக