சனி, 7 மே, 2011

Credit Card Fraud சிங்கப்பூரில் கணினித்துறையில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள அவர் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜே்ாமன்

கணினி விளையாட்டு: கள்ளக் கடனட்டையில் பண மோசடி ஐவருக்கு சிறை

"கடனட்டையில் பண மோசடி ஐவருக்கு சிறை
கள்ளக் கடன் அட்டைகள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கைது செய்யப்பட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவின் தலைவராக மட்டக்களப்பைச் சோ்ந்த தரன் எனும் பொறியியலாளர் செயற்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் கணினித்துறையில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள அவர் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜே்ாமன் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் தன் நண்பர்களுடன் கூட்டு வலையமைப்பொன்றை மேற்கொண்டு கள்ளக் கடனட்டைகள் மூலமாக பெருந்தொகையான பணத்தை மோசடி செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டவர்களின் கடனட்டைத் தகவல்களைப் பெறுவதற்காக இணையத்தளம் ஒன்றுக்கும், உள்நாட்டவர்களின் கடனட்டைத்தகவல்களுக்காக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்கள் பலருக்கும் அவர்கள் பெரும் தொகைப் பணத்தை மாதாமாதம் கொடுத்து வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கள்ளத்தனமாகப் பெறப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடனட்டைகளின் தகவல்களைக் கொண்டு கள்ளக் கடனட்டைகளை உருவாக்குவதற்காக கனடா மற்றும் இந்தியாவிலிருந்து இரண்டு இயந்திரங்களையும் இவர்கள் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு உதவியாகச் செயற்பட்ட ஒரு தமிழர், மூன்று முஸ்லிம்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடிக்கும்பலுக்கு கடனட்டைகளின் தகவல்களைத் திருடி வழங்கிய எரிபொருள் நிலையங்களின் ஊழியர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: