செவ்வாய், 16 நவம்பர், 2010

மூன்று யாழ்ப்பாண தமிழ் இளைஞர்கள் பிரேஸிலிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்

மூன்று யாழ்ப்பாண தமிழ் இளைஞர்கள் பிரேஸிலிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மூன்று இளைஞர்களும் பிரேஸிலிருந்து ஈக்குவடோரிற்கு செல்ல முற்பட்ட போது பிரேஸில் பொலிஸார் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான முறையில் செயற்பட்ட காரணத்தினால் குறித்த இளைஞர்களை கைது செய்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் ஈக்குவடோருக்கு செல்ல முற்பட்ட குறித்த இலங்கைத் தமிழ் இளைஞர்களை பிரேஸில் நாடு கடத்தியுள்ளது.
விமானம் ஊடாக குறித்த நபர்கள் ஈக்குவடோருக்கு செல்ல முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்பட்ட மூவரும் நேற்று இலங்கை திரும்பியியுள்ளதாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த இளைஞர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்பட்ட இந்த யாழ்ப்பாண தமிழ் இளைஞர்களின் பெயர் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை: