திங்கள், 15 நவம்பர், 2010

கோ - 'குவியமில்லா' விளக்கம் அயன் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு கே.வி. ஆனந்த்



        யன் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு கே.வி. ஆனந்த் இயக்கிக் கொண்டிருக்கும் படம் 'கோ'. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் மகள் கார்த்திகா தமிழில் முதல் முறையாக அறிமுகம் ஆகிறார். அஜ்மல், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மைனா படத்தை தொடர்ந்து, கோ படத்தை வெளியிடுகிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ். படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது. அதற்கு முன் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

 

கோ படத்தின் டிரெய்லருக்கு இணையதளத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்த இயக்குனர் கே.வி.ஆனந்த், “அயன் படத்தை விட இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாய் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை கோ பூர்த்தி செய்யும்” என்றும் தெரிவித்தார்.

ஏதோ குவியமில்லா காட்சிப் பேழை... என்ற ஹாரிஸ் ஜெயராஜின் மயக்கும் மெலடி பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை எழுதியிருப்பவர் வைரமுத்துவின் மகன் கார்க்கி. எந்திரன் படத்தில் கார்க்கி எழுதிய இரண்டு பாடல்களுமே சூப்பர் ஹிட். அது சரி, அதென்ன குவியமில்லா காட்சிப் பேழை? குவியமில்லா என்றால் 'ஆவுட் ஆப் போகஸ்' என்று அர்த்தமாம். 

இந்த படத்தில் நாயகன் ஜீவா புகைப்பட நிருபராக நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு புகைப்படக் காரனின் காதல் குழப்பத்தை விளக்க இதை விட ஒரு வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை என்று சொல்கிறார் கார்க்கி. இந்த படத்தில் இன்னொரு பாடலையும் கார்க்கி எழுதியிருக்கிறார். விரைவில் உங்கள் செவிகளுக்கு மயக்கம் சேர்க்க வருகிறது குவியமில்லா ஒரு காட்சிப் பேழை...

கருத்துகள் இல்லை: