புதன், 17 நவம்பர், 2010

டக்ளஸ் தோவானந்தா: நாவற்குழியில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேறுமாறு அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா கோரிக்கை!

யாழ்ப்பாணம் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (16) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சர் விமல் வீரவன்சவும் தம்மிடம் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த முயற்சியில் ஈடுபடுவதாக அமைச்சர் கூறினார்.
யாழ்ப்பாணம் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள சிங்கள மக்களைச்சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி நல்லதோர் முடிவை ஏற்படுத்த அங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்குமாறு ஜனாதிபதியும் அமைச்சர் விமல் வீரவன்சவும் என்னுடன் காலையில் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்.
இன்று (நேற்று) நான் அவர்களை சந்தித்து ஜனாதிபதியின் செய்தியை தெரிவித்து நல்லமுடிவை ஏற்படுத்துவேன் என்று பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுக்காலை (16) யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் முதலீட்டு அபிவிருத்தி கருத்தரங்கையும் இயந்திரசாதனங்களின் கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்க சபையின் தலைவர் உதயஸ்ரீ காரியவசம் பொது முகாமையாளர் திருமதி ஜஸ்மின் மன்னம்பெரும உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து உரையாற்றுகையில், சட்டத்துக்கு புறம்பாக தமிழராகிலும் சரி சிங்கள மக்களாயினும்சரி அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்.
மஹிந்த சிந்தனை செயற்றிட்டத் துக்கமைவாக தொழில் உருவாக்க நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஊடாக நாடளாவிய ரீதியில் தொழில் விருத்தித் திறமையை கிராமிய மட்டங்களில் உருவாக்கக் கூடியதொரு வேலை திட்டம் அவசியமாகவுள்ள இச்செயல்திட்டத்தை இன்றைய தினம் கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் நடத்தப்படுகின்ற இம்முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டமானது தொழில்விருத்தித் திட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமையுமென நான் நம்புகிறேன்.
வட மாகாணத்தில் செயல்படுகின்ற கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் திட்டம் அவசியமாகவுள்ள இச்செயல்திட்டத்தை இன்றைய தினம் கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் நடத்தப்படுகின்ற இம்முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டமானது தொழில்விருத்தித் திட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமையுமென நான் நம்புகிறேன்.
வட மாகாணத்தில் செயல்படுகின்ற கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகமானது பல்வேறு உற்பத்தி முறைகளை கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு அறிவுபூர்வமாக வழங்கக்கூடிய தொழில்நுட்ப வேலைத் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதால் வட மாகாணத்தில் தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது.
குறிப்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக் கிட்டவுள்ளதுடன் சுய முயற்சியாளர்கள் தொழில்களை ஆரம்பிக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: