சனி, 20 நவம்பர், 2010

அந்த லஞ்சப் பணத்தை எப்படி வசூலிப்பார்கள்?

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்தியா இதுவரை காணாத பெரும் தொகை இழக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களைத் திருப்திப்படுத்த தேசத்துக்கு நஷ்டம் விளைவிக்கும் அளவுக்கு துணிந்திருக்கிறார்கள் அதிகாரத்திலுள்ளோர். 'வெள்ளையர் காலத்திலும் நடந்திராத கொள்ளையாக அல்லவா இருக்கிறது' என நடுநிலையாளர்கள் மனம் கொதித்துப் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2 ஜி விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிகட்டும் வகையில், குறைவான தொகைக்கு உரிமம் பெற்ற அத்தனை நிறுவனங்களிடமும், இன்றைய மார்க்கெட் ரேட்டை வசூலிக்க அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.

ஒரு வேளை இது நடந்தால், பலரும் கவனிக்காமல் விட்ட ஒரு கேள்வி விசுவரூபம் எடுக்கும்.

அது... இந்த 2 ஜி உரிமத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க தனியார் நிறுவனங்கள் கொடுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம்!

அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி லஞ்சப் பணம்!!

இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் எப்படி திருப்பி வசூலிக்கப் போகின்றன? துறைக்குப் பொறுப்பானவர்கள், ஒதுக்கீடு செய்தவர்களின் சட்டையைப் பிடித்து திரும்ப எடுத்து வையுங்கள் அந்தப் பணத்தை என்று கூற முடியுமா...

இதனை எப்படி வெளிக் கொண்டுவர முடியும்? என்ற கேள்வி எழலாம். அரசு மனது வைத்து நேர்மையான விசாரணையை மேற்கொண்டால், வெளிக்கொணர முடியும். ஒரு வகையில் இந்தப் பணம் மொத்தமும் கணக்கில் வராத கறுப்புப் பணம். நியாயமாக அரசுக்கு சேர வேண்டிய பணம். அதை எப்போது அரசு கையகப்படுத்தப் போகிறது?

விசாரணை என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி, இந்த லஞ்சப் பண விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், இந்தத் தனியார் நிறுவனங்கள் திருடனுக்கு தேள்கொட்டிய மாதிரி வாய் மூடி மவுனம் சாதித்து, பொருத்தமான தருணத்தில் மீண்டும் காரியம் சாதித்துக் கொள்ளப் போகும் அபாயமும் இதில் உள்ளது!

எனவே இந்த ஊழல் முன்னிலும் பல மடங்கு அதிகமாக நடக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே தவறு செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதோடு, இந்த தவறைச் செய்ய கைமாறிய பெரும் தொகையைக் கண்டுபிடித்து வெளிக் கொணர்வதும் அவசியம்.

கட்சி சார்பற்ற பார்வை கொண்டவர்களுக்கு இன்னமும் கூட சின்ன நம்பிக்கையைத் தந்துவரும் டாக்டர் மன்மோகன் சிங் அரசு, செய்யுமா இதை?

பதிவு செய்தவர்: கலாநிதி மாறன்
பதிவு செய்தது: 20 Nov 2010 7:32 pm
கலாநிதி மாறன் இப்போ Spice Jet விமான நிறுவனத்தின் தலைவர்? அவரது மனைவி இன்னொரு இயக்குனர்? எங்கே இருந்து வந்தது இந்தப் பணமா? தயாநிதி மாறன் இந்த ஊழலுக்கு அச்சாரம் போட்ட கடிதம் CNN தொலைகாட்சியில் காட்டப் பட்டதை பாருங்க, ஊழல் ராஜாங்கம்?

பதிவு செய்தவர்: கூஜா
பதிவு செய்தது: 20 Nov 2010 7:23 pm
கூஜா-குனிமொழியின் சொத்த வித்தா கெடைக்கும்..பணம்..அப்புறம் கூகுல் பூந்தி..

பதிவு செய்தவர்: Ilamselvan
பதிவு செய்தது: 20 Nov 2010 7:22 pm
If Government agrees for JPC the truth will come out. Every one found guilty should be prosecuted

பதிவு செய்தவர்: பொறுப்பானவர்கள்
பதிவு செய்தது: 20 Nov 2010 7:19 pm
அதென்னா ஒரு இடத்தளையும் ராசா பேரை போடவே இல்லை? வாங்குன காசுக்கு விசுவாசமா? இல்லை கோடிக்கக்கான பணத்தை ராசாவின் அமைச்சக பியூன் தான் வாங்கிக் கொண்டு அனுமதி கொடுத்தான்னு செய்தி போடப் போறீங்களா? ராசாவை உள்ளே போட்டு நாலு தட்டு தட்டுனா எல்லாப் பணமும் வெளியே வரும், தமிழில் பல தொலைகாட்சிகள் மூட வேண்டியிருக்கும்

பதிவு செய்தவர்: அப்பாவி நாடோடி
பதிவு செய்தது: 20 Nov 2010 7:14 pm
இதை நான் பதிவு செய்வதற்கு முன் பலமுறை யோசனை செய்து விட்டேன், மிகவும் மன வருத்ததுடன் இதை நான் பதிவு செய்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும் , நடப்பவைகள் எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது நகசல்கள் வழி தான் சிறந்தது என்று தோன்றுகிறது, ஜனநாயகத்தின் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும் போல் தெரிகிறது, கண்ணீருடன் அப்பாவி நாடோடி

பதிவு செய்தவர்: ஒழிக
பதிவு செய்தது: 20 Nov 2010 7:12 pm
தேச துரோகி கருணா நிதி ஒழிக . அவன் குடும்பம் ஒழிக .

பதிவு செய்தவர்: பணம்
பதிவு செய்தது: 20 Nov 2010 7:08 pm
பணம் எங்கயும் போகவில்லை எல்லாம் தமில்ழ்நாட்டில் உள்ளது . என்னும் பாத்து எலேச்டின் ல உஸ் பண்ணுவாங்க

பதிவு செய்தவர்: நான்
பதிவு செய்தது: 20 Nov 2010 6:36 pm
அந்த தோப்பா தலையன் உண்மை வெளியே வர விட மாட்டான்.

பதிவு செய்தவர்: மக்கள்
பதிவு செய்தது: 20 Nov 2010 6:25 pm
விசாரணை என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி, இந்த லஞ்சப் பண விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், இந்தத் தனியார் நிறுவனங்கள் திருடனுக்கு தேள்கொட்டிய மாதிரி வாய் மூடி மவுனம் சாதித்து, பொருத்தமான தருணத்தில் மீண்டும் காரியம் சாதித்துக் கொள்ளப் போகும் அபாயமும் இதில் உள்ளது! வசூல் பன்னம்மாடங்கே அப்புடி செஞ்சா ஆட்சிய கவுதுருவங்கே

பதிவு செய்தவர்: நிலவன்
பதிவு செய்தது: 20 Nov 2010 6:02 pm
தட்ஸ்தமிழில் கருத்துக்கள் இடம்பெற வேண்டுமாயின் அவர்களுக்கும் லஞ்சத்தை எதிபார்க்கிறார்கல்போல் தெரிகிறது.அல்லது ஏற்க்கனவே வாங்கியதன் அடிப்படையில் சிலரது கருத்துக்களைப் போடாமல் விடுகிறார்கள்போல் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: