புதன், 17 நவம்பர், 2010

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலை தொடர்புத்துறை பதவியை ராஜினாமா செய்த பிறகு அமைச்சர் ராசா இன்று சென்னை திரும்பினார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்க திட்டமிட்டிருந்தன. இதனால் சோனியா தலைமையில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

   
சென்னையில் முதல்வர் இல்லத்திற்கு இரண்டு முறை சென்று ஆ.ராசா இந்த விவகாரம் குறித்து ஆலோசித்தார்.

பின்னர் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிவுறுத்தியதன் பேரில் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் ராசா.

அதன்பிறகு இன்று அவர் சென்னை திரும்பினார். அவரை வரவேற்க 5000 திமுகவினர் சென்னை விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் ஆ.ராசாவை வரவேற்க காத்திருந்தார்.

ராசா விமான நிலையத்திற்கு வந்திரங்கியதும் முக்கிய பிரமுகர்கள் அவரை வரவேற்றனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து கேள்விகள் கேட்க பத்திரிக்கையாளர்கள் தயாராக இருந்தனர். ஆனால் கூட்டத்தின் காரணமாக ஆ.ராசா செய்தியாளர்களை சந்திக்க முடியவில்லை. நேரே காரில் ஏறி புறப்பட்டுவிட்டார்.

கருத்துகள் இல்லை: