வியாழன், 18 நவம்பர், 2010

வெளிநாடுகளில் இந்தியாவின் கறுப்பு பணம் ; 20 லட்சம் கோடியாம் ; 60 ஆண்டு சாதனை

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை போட்டு வைப்பதை தடுக்க இது வரை உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் எத்தனிக்கும் கள்ளத்தனம் பெருமளவில் குவிந்திருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1948 முதல் 2008 வரை கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பணம் கறுப்பு பணமாக வெளிநாடுகளில் 20 லட்சம் கோடி வரை டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வு நடத்திய பொருளாதார நிபுணர் தேவ்கர் என்பவர் இந்த திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தல் மற்றும் கணக்கில் வராத பணத்தை சுவிஸ் நாட்டில் உள்ள பாங்குளில் போட்டு வருகின்றனர். இந்த கள்ளப்பணத்தை கணக்கில் எடுத்து . யார், யார் ஈடுபட்டுள்ளனர் என கண்டறிந்து இதுவரை உருப்படியான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தப்பாடில்லை.
இதற்கிடையில் சுவிஸ் நாட்டு பாங்குகளில் கணக்கு வைத்திருப்போரை இந்திய அரசுக்கு தெரிவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் எந்தளவுக்கு நடைமுறை வந்தது என்பது இன்னும் உரிய தகவல்கள் இல்லை. 
இது போன்ற கறுப்பு பணம் வெளிநாடுகளில் எவ்வளவு டிபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறியும் விதமாக சர்வேதச பொருளாதார நிதிய வல்லுனர் தேவ்கர் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கள்பப்பணம் டிபாசிட் ஆண்டுக்கு 11. 5 சதவீதம் வளர்ந்து வந்திருக்கிறது.1948 முதல் 2008 கடந்த 60 ஆண்டுகளில் இந்திய பணம் 462 பில்லியன் டாலர் ( 20, 556, 848 000, 000 ) ஆகும். இந்த பணத்தின் மூலம் நாட்டில் வறுமை , மின்சாரம் இல்லாத கிராமங்கள் மேம்படுத்துதல், தடுப்பூசி, குடி நீர் வசதி போன்றவற்றை செய்து முடிக்க முடியும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பணம் போடுபவர்கள் யார் ? : இது போன்ற பணத்தை யார் போட்டுள்ளனர் என்ற கேள்விக்கு அவர் அளித்திருக்கும் விளக்கத்தில் பொருள் உற்பத்தியாளர்கள், மற்றும் முக்கிய பிரபல புள்ளிகள், பாலிவுட் நடிகர்கள் , கிரிக்கெட் நட்சத்திரங்கள் அடங்குவர். ஆனால் யார் பெயர் என்ன என்ற விவரத்தை சொல்ல மறுத்து விட்டார். 
ர.ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-11-18 19:41:50 IST
காங்கிரஸ் திறமைய பார்த்தீர்களா? இதில் முக்கால்வாசி அரசியல்வாதிகளின் பணம் என்பதில் சந்தேகம் இல்லை .அதனால் தான் அதனை இந்தியா கொண்டு வர முயற்சி எடுக்கவில்லை. தயவு செய்து எல்லா ஊடகங்களும் இந்தனை கொண்டு வர பாடுபடுங்கள். நன்றி....
கிருஷ்ணசாமி - பெங்களூர்,இந்தியா
2010-11-18 19:41:00 IST
அதுல பாதி கலைஞர் குடும்பத்து பணமாமா ....நிசமா......
bharath - trivandrum,இந்தியா
2010-11-18 19:32:45 IST
இப்படியே போன நாடு ஊருப்படும்டா சாமி...
க. ஜெயவேலு - மதுரை,இந்தியா
2010-11-18 19:31:09 IST
Out of 20.55 lakhs crore A. Raja's share itself is 1.76 lakhs crore. Comparing with him it is nothing. let us proud to be tamilian because of A. Raja....
அப்துல் ரஹீம் அய்யம்பேட்டை - அய்யம்பேட்டை,இந்தியா
2010-11-18 19:27:42 IST
லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால் நம் நாட்டில் அரசியல் ஒழிந்து இறக்கமுள்ள சர்வதிகாரி வந்தால் மட்டுமே முடியும்...
பஜ்ஜிபை - chennai,இந்தியா
2010-11-18 19:27:35 IST
ஹையா இந்தியா "வல்லுர்று" அரசாகி விட்டது...
balu - qatar,இந்தியா
2010-11-18 19:23:45 IST
எல்லா அரசியல்வாதியையும் நாட்டை விட்டு துரத்தனு.ம் அப்பதான் சரிவரும் ....
செந்தில்குமார் - சென்னை,இந்தியா
2010-11-18 19:16:50 IST
சூப்பர்..............அட்ட்ரா சக்க ............... அட்ட்ரா சக்க ...............அட்ட்ரா சக்க ...............அட்ட்ரா......
Manoharan - Tirupur,இந்தியா
2010-11-18 19:09:48 IST
இந்த பணம் தவறு. ஒரே ஒரு spectrum ulalil மட்டும் ரூபாய் 1.76 லட்சம் கோடி....
venkatesan - ulundurpet,இந்தியா
2010-11-18 19:03:08 IST
திரு தேவ்கர் அவர்களுக்கு நன்றி விரைவில் யார் யார் என்று தெரிவிக்க வேண்டும்....
முட்டாள் ஜனம் - சென்னை,இந்தியா
2010-11-18 18:58:10 IST
60 லட்சம் கோடியாம். 20 லட்சம் இல்லை. இந்த செய்தி பழைய செய்தி....
அப்துல் ரஹீம் அய்யம்பேட்டை - அய்யம்பேட்டை,இந்தியா
2010-11-18 18:56:49 IST
கூடிய சீக்கிரம் இந்தியாவில் உள்ள 90 % பேர்கள் ஒன்னும் இல்லாதவர்கள் ஆகி அடிமையாகி விடுவார்கள். மீதி ௦ 10 % பேர்களிடம் எல்லா பணமும் போய் சேர்ந்து விடும். எல்லா பணத்தையும் சுருட்டி கொண்டு வெளி நாட்டிற்கு ஓடி போய் செட்டில் ஆகி விடுவார்கள். இது தான் நடக்க போகிறது....
ரமேஷ் - Tenkasi,இந்தியா
2010-11-18 18:54:09 IST
ஆனா இங்கிருந்து பணம் சம்பாரிக்க பாவம் அப்பாவி மக்கள் நாடு நாடா அலையுரானுவோ. முதல ஒரு பசுமை புரட்சி ஒன்னும் வந்தா தான் இந்த நாடு உருப்படும்...
காசி - சென்னை,இந்தியா
2010-11-18 18:46:07 IST
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.... இணைந்தே இன்னும் பல "சாதனை" புரிவோம் ........
நாகராஜன் - மதுரை,இந்தியா
2010-11-18 18:43:42 IST
indias very fast growing blak money number one world to you yes or No ? what a surprises...
venkateswaran - perambalur,இந்தியா
2010-11-18 18:42:55 IST
இந்திய சீக்கிரமே வல்லரசாக ஆகி விடும்...
ராஜ் - mombasa,கென்யா
2010-11-18 18:42:31 IST
அட பாவிகளா நாங்க இங்கேர்ந்து கஷ்ட்டப்பட்டு நம்ம நாட்டுக்கு அனுப்புனா.. நீங்க அங்கேர்ந்து திருடி இங்க அனுபுரீங்களா.... வெளங்கும் தேசம்......
நவீன் - மூலனூர்,இந்தியா
2010-11-18 18:41:54 IST
கவலை படுவதை விட தீர்வு காணுவதே சரியானது...
ராஜ் - சென்னை,இந்தியா
2010-11-18 18:39:28 IST
இதுல 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி யார் கிட்ட இருக்குன்னு தெரிஞ்சுடுச்சு... மீதி இருக்குற 18 லட்சத்து 30 ஆயிரம் கோடி யார்‌ யார் கிட்ட இருக்குன்னு கண்டுபுடுச்சு சொல்லிடுங்க.......
Yogi - Chennai,இந்தியா
2010-11-18 18:38:07 IST
what would happen if there is another world war and countries like singapore, germany are destroyed in the war? All the money invested is gone right?...
ம ஹா லிங்கம் - சென்னை,இந்தியா
2010-11-18 18:37:16 IST
பொருளாதார மேதை மிஸ்டர் கிளீன் மன்மோகன் சிங்க் அவர்களுக்கு நன்றி...
ப.suthakar - tirupur,இந்தியா
2010-11-18 18:36:25 IST
அரசியல்வாதிகளின் இருபது வருட சாதனை !!!!!!...
ச ஸ்ரீனிவாசன் - வெள்ளூர்தமிழ்நாடு,இந்தியா
2010-11-18 18:30:05 IST
அனைத்து பணத்தையும் பறிமுதல் செய்து அரசுவுடமை ஆக்க வேண்டும். அந்த பெரும் பணக்கார வர்க்கத்தை கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் .அவர்களின் வீட்டின் முகப்பில் அவர்கள் எவ்வளவு பணம் வைத்துள்ளார்கள் என்ற விபரம் ஆடங்கிய பலகை அரசு சார்பில் வைக்க வேண்டும்...
hari - chennai,இந்தியா
2010-11-18 17:56:49 IST
I dont have such huge amount of money. I dont have a chance to plunder crores and crores of money from poor public. I dont have enough power to do the above said things. Im not an entrepreneur. Also Im not a Congress or DMK politician. Im eigible and So I curse, I scold and I express my anger to all those who have accumulated such and such amount of black money in swiss bank....
manivannan - chennai,இந்தியா
2010-11-18 17:52:12 IST
is the money idle or being used elsewhere...
வெங்கட் - சென்னை,இந்தியா
2010-11-18 17:51:55 IST
இந்தியா சூப்பர்...
சுரேஷ் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-18 17:49:51 IST
இந்த பூனைக்கு மணி கட்ட யாருமே இல்லையா? தினமும் நாம வயத்துலயும் வா௦யிலயும் அடிச்சுக வேண்டியது தானோ? யாராவது வந்து இதுக்கொரு வழி சொல்லுங்களேன்,குப்புனும் சுப்பனும் உழைச்ச வியர்வை இப்படியா வீணா போகுனும்,எங்க பணத்தை யாராவது திருப்ப ஏற்பாடு செய்தால் கோடி புண்ணியம் கெடைக்கும்,நாங்க எல்லாம் வயறு எரிஞ்சு சொல்லுறோம். எவன் எவன் பணம் அங்க கிடக்குதோ அவன் குடும்பம எல்லாம் பதினாறு தலை முறைக்கு விளங்க மாட்டாங்க.,நாசமா போயிடுவீர்கள்...
சுரேஷ் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-18 17:28:53 IST
இந்தியாவுல ராணுவ ஆட்சி வந்தால் மட்டுமே இந்த ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியும்! ராணுவ ஆட்சி வந்து நம்ப அரசியல் வாதிகள்(திமுக, அதிமுக,காங்கிரஸ், பாரதீய ஜனதா, மதிமுக,பாமக,விடுதலை சிருத்தைகள்) வீட்டில் சோதனை போட்டு எல்லோரையும் உள்ளார போட்டு பின்ற பின்னுள்ள எல்லாரும் உண்மையை கக்கிருவங்க! யாரு யாரா வச்சிருகாங்க சாரி யாரு யாரு எவளு பணம் வச்சிருக்கான் என்ற உண்மையெல்லாம் சொல்லிருவாணுக! இவர்களிடம் இருந்து எடுக்கிற பணத்தை வைத்து ச்விச்ஸ் பாங்குக்க கூட வட்டி இல்லாம கடன் குடுக்கலாம்!...
முகுந்தன் - சென்னை,இந்தியா
2010-11-18 17:28:07 IST
முன்னெல்லாம் கோடி கணக்கிலே ஊழல் செய்தாலே பெரிய செய்தியா வரும்... இப்போ லேட்டஸ்ட் trend என்னன்னா 1.7 லட்சம் கோடி, 20 லட்சம் கோடின்னு கணக்கு சொல்லுறாங்க... இந்தியாவின் பொருளாதாரம் ரொம்ப முன்னேறிடுச்சு......
v chandrasekaran - Bangalore,இந்தியா
2010-11-18 17:24:17 IST
சூப்பர் மாப்பு ரொம்ப சூப்பர் இது...
jayaram - chennai,இந்தியா
2010-11-18 17:21:06 IST
ஹையா நம்ம நாடுதான் கருப்பு பணத்திலும் முதல். ஹையா நம்ம நாடு தான் பர்ஸ்ட்....
வேல்முருகன் - மாலே,மாலத்தீவு
2010-11-18 17:14:53 IST
வாழ்க கருப்பு ஆடுகள், வறுமையில் வாடுங்கள் மக்களே. அது நம் தலையெழுத்து. the பாஸ்: பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான், ஏழை மேலும் ஏழை ஆகிறான்...
இந்தியன் - நன்னிலம்,இந்தியா
2010-11-18 17:13:41 IST
இந்திய பொது ஜனம் அடுத்த விடுதலை போராட்டம் நடத்த வேண்டியது கொள்ளையர் களிடமிருந்தும் கருப்பு பண முதலைகளிடமிருந்தும் என்பதையே இது காட்டுகின்றது. சமுக நல ஆர்வலராக காட்டும் அருந்ததி ராய் போன்றோர் இதனை குறித்து பேசாதது ஏன்?...
Shan - சென்னை,இந்தியா
2010-11-18 17:13:08 IST
இந்தியா வல்லரசு ஆயுடும்னு சொல்றது 'வாய்ல வடை சுடுறது' போல இருக்கு....
அருண் - திருப்பூர்,இந்தியா
2010-11-18 17:13:03 IST
மக்களோ பாருங்கள் ====>>>1948 முதல் 2008 கடந்த 60 ஆண்டுகளில் இந்திய பணம் 462 பில்லியன் டாலர் ( 20, 556, 848 000, 000 ) ஆகும். இந்த பணத்தின் மூலம் நாட்டில் வறுமை , மின்சாரம் இல்லாத கிராமங்கள் மேம்படுத்துதல், தடுப்பூசி, குடி நீர் வசதி போன்றவற்றை செய்து முடிக்க முடியும்<====...
A - Chennaai,இந்தியா
2010-11-18 17:12:16 IST
People putting black money don't understand that proper nomination facility is not available there. When they die the money goes to Swiss account. The enormous black money they put they will not be able to spend in ther life time. This is a net loss situation to India.Indian Govt should make all efforts to bring back this money before it is lost ....
அருண் - திருப்பூர்,இந்தியா
2010-11-18 17:08:23 IST
வெரி குட்.......... சூப்பர்........நாடு ???...
பொது சனம் - தமிழ்naadu,இந்தியா
2010-11-18 17:01:00 IST
"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்"...
rafik - chennai,இந்தியா
2010-11-18 16:57:56 IST
இந்த மாதிரி இருந்தா எங்கு இருந்து வல்லரசு ஆகும்....
மஞ்சள் துண்டு - சென்னை,இந்தியா
2010-11-18 16:57:04 IST
இதை தினமலர் வெளிகொண்டு வரவேண்டும்... இது மக்களுடைய விருப்பம்......
marimuthu - samsai,இந்தியா
2010-11-18 16:55:15 IST
இதில் எத்தனைபேர் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள், தயவு செய்து சொல்லுங்கள்..... இதற்கு எல்லாம் பார்லிமெண்டில் குரல் கொடுக்க மாட்டார்கள், இதில் எல்லாம் அவர்கள் பணம்தான் இருக்கிறது... அங்கே போய் பாருங்க ராஜாவோட பணம் எவ்வளவு என்று..........
sbala - London,யுனைடெட் கிங்டம்
2010-11-18 16:49:07 IST
உலக மகா உத்தமரான மன்மோகன் சிங் கடந்த நான்கு வருடங்களாக இது பற்றி என்ன முயற்சிகள் எடுத்துள்ளார் என்பது அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம். இவரை போல யோக்கியர்கள் வெளிப்படியான அயோக்கியர்களை விட ஆபத்தானவர்கள். இவர் மற்றும் சிதம்பரம், அலுவாலியா ஆகியோரின் ஒரே வேலை இந்திய நலன்களை அமெரிக்காவுக்கு அடகு வைப்பது மட்டும்தான். இந்தியாவுக்கு இவர்கள் செய்யும் துரோகம் அளவில்லாதது....
ப.raj - chennai,இந்தியா
2010-11-18 16:43:45 IST
ஒரே வார்த்தை, ஒஹோன்னு சொல்லு காங்கிரெஸ் காங்கிரெஸ் காங்கிரெஸ் காங்கிரெஸ் காங்கிரெஸ் காங்கிரெஸ் காங்கிரெஸ் காங்கிரெஸ்...
கதிர்சொர்ணவேல் - Mumbai,இந்தியா
2010-11-18 16:43:14 IST
மிக பெரிய சாதனை தான். இந்தியா உண்மையிலே மிகவும் ஏழை நாடு தான். இந்த பணம் எப்படி போனது ? இதற்கு காரணம் ஆனவர்களை யார் கண்டுபிடிப்பது ? சுப்ரீம் கோர்ட் தான் நேரிடையாக ராணுவம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்......
மாநகர் நெல்லை லெனின் - கத்தார்,கத்தார்
2010-11-18 16:24:00 IST
இந்திய முதலாளிகளின் சுயநலம் 20 லட்சம் கோடி மதிப்பிடபடுகிறது. இதெலாம் இந்திய மக்களின் உயிர். அது இன்று வெளி நாடுகளில் 20 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவில் ஏழை, ஏழையாக இருக்கிறார்கள். கொள்ளை அடிப்பவர்களும், சுயநலவாதிகளும் பெருகி வருகிறார்கள். இந்தியா எப்போது வல்லரசாக மாறும் என்று நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டியதுதான். வேண்டுமென்றல் சினிமாவில் பார்க்கலாம்....
மாரிஸ். - சென்னை,இந்தியா
2010-11-18 16:16:26 IST
சூப்பர்..............அட்ட்ரா சக்க ............... அட்ட்ரா சக்க ...............அட்ட்ரா சக்க ...............அட்ட்ரா...
க.ஆறுமுகம் - புதுக்கோட்டை.VENNAVALKUDI,இந்தியா
2010-11-18 16:15:49 IST
வெரி வெல் இந்தியன்... கீப் கோ கீப்...
விஜய் - saudi,இந்தியா
2010-11-18 16:15:34 IST
இத தடுக்க துப்பிலாத அரசு, பிழைப்புக்காக வெளிநாடு வந்து சம்பாரிக்கும் பணத்துக்காக வரி வசூலிக்க திட்டம் தீட்டுது. தூ.......
venkateswaran - perambalur,இந்தியா
2010-11-18 16:14:58 IST
வெரி குட் கவர்மென்ட்...
PADMANABAN - Neduvasal,இந்தியா
2010-11-18 16:13:33 IST
10 ரூபா சம்பாரிக்கரதுக்கு நாயா பேயா நாங்க வெளிநாட்ல உழைக்கிறோம். ஆனா இவனுங்க இப்படி ஈசியா கூட்டிகுடுத்து சம்பாரிக்கரானுங்க, இவனுங்க எங்க இந்தியாவ கப்பத்த போரானுங்க? இவனுங்களும் அனுபவிக்க முடியாம, மத்தவங்க வைத்துளையும் அடிச்சு என்ன சுகம் கண்டானுன்களோ பிணம் தின்னும் நாய்ங்க. மக்கள்தான் இவனுங்கள திருத்தணும். ஆண்டவனை எல்லாம் இவனுங்க விலைக்கு வாங்கிட்டானுங்க. வெளிநாட்டுல நாங்க கஷ்ட்டப்பட்டு சம்பாரிக்கரதையும் கஸ்டம்ஸ் நாய்ங்க புடுங்குது, இவனுங்களை எல்லாம் நிக்க வெச்சி சுடணும். எனதருமை இந்திய மக்களே, இவனுங்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள், உழைப்பவனுக்கு வாழ்க்கை கொடுங்கள், நல்லவர்களை வாழவிடுங்கள், கேட்டவர்களை அழித்துவிடுங்கள். இப்படிக்கு விடியலுக்கு ஏங்கும் அபலை வெளிநாட்டுவாழ் இந்தியன்...
ஜெகன் - chicago,இந்தியா
2010-11-18 16:13:13 IST
இதுபோன்ற செய்திகளை வெளி இடுவதில் தினமலர் தினமலர் தான். ஆனால் ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், தமிழ் நாட்டில் அனைத்து அரசு அலுவலங்களிலும் ஊழல் வெளிப்படையாக வாங்குகிறார்கள். நீங்கள் அதனை ஏன் வெளி கொண்டுவர மாட்டேங்கிறீர்கள்....
ஆனந்தன் - ராஜமுன்றி,இந்தியா
2010-11-18 16:04:12 IST
அடேங்கப்பா...
M.Balakrishnan balki bala - sharjah,இந்தியா
2010-11-18 16:04:06 IST
it must be in trillions of dollors.our govt should make a ruling or ordinance saying that swiss money account holders will not be asked for the income details and that 50% should be given to the govt especially to alleviate poverty,improve power generation,infrastructure, education and agriculture and water projects and this money will be returned to them in instalments on no interest basis in 20-30 years of time.balance 50% they must bring it to the accounts and pay taxes.this is the practical approach which will help make our country a Super power in next 5 years. JAI HIND...
Sundar - Erode,இந்தியா
2010-11-18 15:55:19 IST
வயிறு எரியது இந்த பணத்தை வைத்து கடைசிகாலத்தின் என்னதான் பண்ணபோகிறார்கள். என்ன ஆட்சி வந்தாலும் இதை ஒண்ணுமே பண்ணமுடியாது. அரசியல்வாதி ஊழல் லஞ்சம் நிறைந்த நாடாகிவிட்டது. வெகுவிரைவில் இந்தியா ஊழலில் No.1 நாடாக ஆகபோகிறது இன்னும் வெகு தூரத்தில் இல்லை...

கருத்துகள் இல்லை: