செவ்வாய், 16 நவம்பர், 2010

ஸ்ரீ.சு கட்சியில் இணையுமாறு சரத்பொன்சேகா என்னை மிரட்டினார் - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்

2008 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையுமாறு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி தன்னை மிரட்டியதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். நேற்று மட்டக்களப்பு ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக செயலாளராகவும் இருந்து சுட்டுக்கொல்லப்பட்ட குமாரசாமி நந்தகோபனின் (ரகு) 2ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் அங்கு உரையாற்றுகையில், கடந்த காலத்தில் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்கள் பின்னர் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்கள் எல்லாம் முடிந்த எந்த போராட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு உரிமைகள் விடுதலை கிடைக்கும்மென்கின்ற பொழுது தான் நாங்களும் அரசியலுக்கு வந்தோம். நாங்கள் அரசியல் ரீதியான கருத்துகளை மேடையில் பேசுவோம் அல்லது விவாதங்களில் பேசுவோம் அல்லது நாங்கள் வடகிழக்கு இணைப்புக்கு எதிரானவர்கள் அல்ல என்கிற விடயங்களை நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன சொல்கின்றது. நாங்கள் வடகிழக்கு இணைந்த தாயகபூமியை மீட்டுத்தருவோம் என கூறுகின்றனர். அவ்வாறு நடந்தால் நாங்களும் அதனை வரவேற்போம். அதேபோன்று இணைப்பதற்கான சாத்தியமான வழி இருக்குமானால் நாங்கள் அது தொடர்பில் சிந்திக்களாம். ஆனால் அது சாத்தியம் இல்லையென்பது நாம் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இருந்து கற்றுக்கொண்டபாடம் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை: