புதன், 17 நவம்பர், 2010

கட்சிக்காரர்களை நம்பாமல் கருணாநிதி அதிகாரிகளை நம்பி, எமர்ஜென்சியை ‘டிக்ளேர்’ செய்திருக்கிறார்

தமிழகத்தில் இனி வரும் ஐந்து மாதங்களிலும் ‘எமர்ஜென்சி ரூல்’தான் என்கிறார்கள் ஆளும் கட்சியினர்.தி.மு.க. அரசின் எல்லா நலத்திட்டங்களிலும் இதுவரை எம்.எல்.ஏ.,அமைச்சர்களின் செயல் அறிக்கைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த தலைமை,இப்போது நேரிடையாக அதிகாரிகள் மூலமாக நிர்வாகத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

தேர்தல் விதிமுறைகள் வர இடைவெளி ஐந்து மாதமே இருப்பதால், முதன்மைச் செயலாளரும் மாவட்டங்களின் கண்காணிப்பு அதிகாரியுமான புஹ்ரில் ஐ.ஏ.எஸ்.எல்லா மாவட்டங்களுக்கும் சென்று முழு பிராக்ரஸ் பற்றி ஆய்வு செய்து வருகிறார். புஹ்ரில் விசிட்டின்போது கலெக்டர், டி.ஆர்.ஓ. ஆகிய வருவாய்த் துறை அதிகாரிகள் மட்டுமே இருக்க வேண்டுமாம். இதில் அமைச்சர்,எம்.எல்.ஏ.வுக்கெல்லாம் அழைப்பே இல்லையாம்! அதுமட்டுமல்லாமல் நான்காண்டு சாதனை என்ற பிரசார வேன் ஒன்றும், பட்டிதொட்டியெல்லாம் பறந்து கொண்டிருக்கிறது. ஆட்சியின் க்ளைமாக்ஸ், கட்சிக்காரர்களை நம்பாமல் கருணாநிதி அதிகாரிகளை நம்பி, எமர்ஜென்சியை ‘டிக்ளேர்’ செய்திருக்கிறார். நிகழ்ச்சிகளைப் புறக்கணித்துவிட்டு ‘புஹ்ரில்’ விசிட்டிற்காக மாவட்ட அதிகாரிகள் பறப்பது, கரைவேட்டிகளுக்கு கடுப்பை உண்டாக்கி இருக்கிறது!

- மருது.

கருத்துகள் இல்லை: