வியாழன், 18 நவம்பர், 2010

இராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது: லங்காதீப

<ராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்ட குறித்த படைவீரர்கள் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதகாத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறுபது படைவீரர்களை கூட்டுக் கொலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கிய விடுதலைப் புலி உறுப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் புலப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளாக புலிகளினால் கைது செய்யப்பட்ட அரசாங்கப் படையினர் கிளிநொச்சியில் காணப்பட்ட சித்திரவதைக் கூடமொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களில் ஐந்து கடற்படை வீரர்களும் அடங்குவதகாக் குறிப்பிடப்படுகிறது.
போர் உச்ச கட்டத்தை அடைந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கூட்டுக் கொலை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை தீயிட்டு கொளுத்தி பின்னர் அவற்றை மண்ணால் மூடியதாக விடுதலைப்புலி சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை: