தினமணி : மதுரை: கனிமொழி சூதானமா இல்லாவிட்டால் மு.க. அழகிரியை போல ஒதுக்கி வைக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே
மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்டு உள்ள இசையுடன்
கூடிய நீர் ஊற்று மற்றும் ஒளிக்கதிரை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்
ராஜூ திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக ஸ்டாலினுடைய குடும்ப கட்சியாகவே மாறிவிட்டது.&
திமுகவில் இப்போதவாது கனிமொழியை பேச
அனுமதித்துள்ளனர். ஆனாலும் கனிமொழி பார்த்து நடந்துக் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே கட்சியில் இருந்து அழகிரி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அது போல்
கனிமொழியையும் ஒதுக்கி வைக்க வாய்ப்புள்ளது.
மேலும் தற்போது மதுரை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார்
/div>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக