மாலைமலர் : சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கலாம் என்ற சட்டத் திருத்தத்துக்கு மத்திய பிரதேச அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கலாம்: ம.பி. அமைச்சரவை ஒப்புதல்
போபால்:
நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர். தனியாக செல்லும் சிறுமிகள் மற்றும் பெண்கள குறிவைத்து இதுபோன்ற வன்முறைகள் அதிகமாக நடந்து வருகின்றன.
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கும் குற்றவாளிகள் சிறிது காலத்தில் வெளியே வந்துவிடுகின்றனர். இதையடுத்து, பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கலாம். மேலும், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு அதிக தண்டனை விதிக்க வழிவகை செய்யவேண்டும். இதற்காக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என கோரப்பட்டது. இந்த சட்டத்திருத்ததுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ம.பி. அரசின் இந்த சட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக