முதலாவதாக, இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வழக்கு போட்டிருந்தால் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
;இரண்டாவதாக, இந்த போராட்டத்தில் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.
மூன்றாவதாக ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு இன்று செய்த சட்டத்திருத்தத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனாலும் முழுமையான சட்டத்திருத்தமாக படவில்லை. ஒரு சிலர் சரி என்று தெரிவித்தாலும், பெரும்பாலானோர் அதனை ஏற்கவில்லை. இந்த சட்டத்திருத்ததை 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது முதன்மையான கோரிக்கையாகும்.
முதல்வர் இதற்கான அறிவிப்பை அறிவித்தால் அடுத்த 10 நிமிடத்தில் நாங்கள் கலைவோம். அதுவரைக்கும் எங்களது போராட்டம் தொடரும். நாங்கள் 8 நாள் கஷ்டப்பட்டோம். அதற்கு முதல்வர் உறுதிமொழி அளிக்க வேண்டும்
;7 நாள் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி. ஆனால் இன்று அவர்கள் செய்த காரியம் மிகப்பெரிய மனவருத்ததை அளிக்கிறது. இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்.நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக