செவ்வாய், 24 ஜனவரி, 2017

மெரீனாவில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி காவி கும்பல் அரங்கேற்ற துடித்த பிரிவினை வாத பூச்சாண்டி .. ஒரு டாக்டரின் சாட்சியம்

அவசர சிகிச்சையில் பொதுவாக drunk and drive காரணமாக சனி ஞாயிறு இரவுகளில் விபத்து காரணமாக அதிக அளவில் வருவார்கள். நேற்றும் முன் தினமும் அவசர சிகிச்சை நைட் டியூட்டி பார்த்துக் கொண்டிருந்த போது எப்போதும் விட விபத்து எண்ணிக்கை குறைவு. மக்கள் பெருவாரியாக மெரினாவில் இருப்பதால் drunk and drive குறைவு என்று அனுமானித்துக் கொண்டேன்.
நேற்று நல்லிரவில் இருவர் தங்களை அட்மிட் செய்யக்கோரி வந்தனர். எதற்காக அட்மிட் செய்ய வேண்டுமென்று கேட்டபோது போராட்டத்திற்கு தேசிய கொடியை தூக்கி சென்றதாகவும் அதைப் பார்த்த ஒரு கும்பல் தங்களை தாக்கியதாகவும் தெரிவித்தனர். அதற்கு ஏன் தாக்கினார்கள் என்று கேட்டபோது தேசிய கொடி வைத்ததால் தாக்கினார்கள் என்று சொன்னார்கள். சரி சிகிச்சை அளிக்கலாம் என்று எதுவும் காயங்கள் ஆகி விட்டதா என்று கேட்டபோது அதை பற்றி அவர் எதையும் சொல்லவில்லை.
AR ரிப்போர்ட் மட்டும் வேண்டும் என்று கூறினர்.
ஆக்ஸிடண்ட் கேஸ் அடிதடி போன்ற காயங்களுக்கு அந்த சம்பவத்தை வைத்து ஒரு FIR போல Accident register Entry எழுத வேண்டும். ஆனால் அவருக்கு காயங்களே கண்ணுக்கு தெரியவில்லை. சிகிச்சை வேண்டாம் AR ரிப்போர்ட் மட்டும் வேண்டும் என்றார்.

அப்படியெல்லால் தர முடியாது என்று அனுப்பி வைத்தோம். அதைத் தொடர்ந்து அவரைப் போலவே நான்கு பேர் AR போட வேண்டும் என்று வந்தனர். காயங்களே இல்லாத காரணத்தால் முடியாது என்று அனுப்பி வைத்தோம்.
இன்று நியூஸ் பார்த்தபோது தான் விளங்கியது. பிரிவினைவாதிகள் வன்முறையை கையில் எடுத்தனர் என்று பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. வன்முறையை பிரிவினைவாதிகள் கையிலெடுத்தனர் என்பதை பரப்ப நேற்று இரவிலிருந்தே திட்டங்கள் துவங்கியது என்பது மட்டும் புரிந்தது.
இன்று மதியத்திலிருந்தே போலிஸ்காரர்கள் 108 ஆம்புலன்ஸை தன் வசமாக்கிக் கொண்டனர். பெரும்பாலும் பொதுமக்களை அட்மிட் செய்ய செயல்படவில்லை. போலிஸை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்வதற்கென்றே செயல்பட்டுக் கொண்டிருந்தது.
சரி பொதுமக்கள் வன்முறையை கையில் எடுத்தார்களா என்று பார்த்தால் போலிஸ் தான் பெரும்பாலான இடங்களில் வண்டிகளை தள்ளி விட்டு அடித்து நொறுக்கவும் தீயிட்டு கொழுத்தவும் செய்திருக்கின்றனர்.
மாணவர்களின் இந்த அறப்போராட்டத்தை இப்படியாகத் முடிக்க முடியும் என்பதை தெரிந்தே முடித்து வைத்திருக்கின்றனர். வாழ்க ஜனநாயகம்   முகநூல் பதிவுகள்

கருத்துகள் இல்லை: