வடக்கின் பிரதான வைத்தியசாலைகளுக்கு தேவையான இரத்தத்தை இராணுவத்தினரே அதிகளவில் வழங்குகின்றனர் என வடக்கு கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளுக்கு இராணுத்தினர் இரத்தம் வழங்கி வருகின்றனர். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய வைத்தியசாலைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மாதாந்தம் 650 பைன்ட் இரத்தம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு சமூகங்களிடையே காணப்படும் வகுப்புவாத கோட்பாடுகளினால் மக்கள் இரத்த தானம் செய்ய பெரிதும் விரும்புவதில்லை. இதனால் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான இரத்தத்தை பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலைமை காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக