பிரபல சினிமா தயாரிப்பாளர் கைது
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் ரமேஷ். தமிழில் விஜய் நடித்த போக்கிரி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். சமீபத்திய இவர் தயாரித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.
இந்நிலையில் தமிழில், டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து ரமேஷை, ஆந்திர புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்தனர்.
இதுகுறித்து விசாரித்த போது, ஆந்திராவில் வைஜெயந்தி ரெட்டி என்பவரிடம் ரூ.18கோடி வரை கடன் வாங்கிய ரமேஷ், ரூ.3.5 கோடியை மட்டும் திருப்பி செலுத்தியிருக்கிறார். மீதி தொகையை வைஜெயந்தி திருப்பி கேட்ட போது, பிரபல ரவுடி பானு கிரண் மூலம் அவரை மிரட்டியிருக்கிறார் ரமேஷ்.
பானு கிரண் மீது ஏற்கனவே சூரி கொலை வழக்கு உட்பட பல குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் பானு கிரணுக்கு, ரமேஷ் ரகசியமாக பல உதவிகள் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ரமேஷை ஆந்திர புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக