கனடாவின் ் தமிழர் தொண்டார்வ நிறுவனமான கனடியத் தமிழ்க் காங்கிரஸின் அலுவலகம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
கனடியத் தமிழ்க் காங்கிரஸ் கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் 11 அலுவலகங்களைக் கொண்டிருந்தாலும் அதன் தலைமையலுவலகம் ரொறன்ரோவின் ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ளது.
இவ்வலுவலகமே கடந்த சனிக்கிழமை இரவுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலைக்குமிடையே ் உடைக்கப்பட்டு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.
கனடியத் தமிழர் காங்கிரஸ் அண்மையில் வருகை தந்த சன் சீ கப்பல் அகதிகள் விவகாரத்தில் செயற்பட்டு வந்ததும் இவ் அகதிகள் தொடர்பான விடயங்கள் மேற்படி அலுவலகத்தில் இருந்த கணனியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அலுவலகத்தைச் சல்லடை போட்டு தேடிய அங்கிருந்த ஆவணங்களையே பெரும்பாலும் கைப்பற்றிச் சென்றுள்ளனர். ரொறன்ரோப் பொலிசார் இவ்விவகாரத்தை ஒரு பாரதூரமான சம்பவமாகக் கருதி அதீத விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடியத் தமிழர்களின் ஒரு சாராரும் தாமும் கனடியத் தமிழ்க் காங்கிரஸைப் போல கப்பல் விவகாரத்தையொட்டிச் செயற்பட முனைந்த போதும் மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.
இந்நிலையில் இச்சம்பவத்தில் எடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அரசின் கைகளிற்கு கிடைக்குமானால் அதனால் அகதிகளாக தற்சமயம் வந்துள்ளவர்களின் சிறீலங்காவிலுள்ள உறவுகள் பாதிக்கப்படுவார்கள் என கனடியத் தமிழ்க் காங்கிரசின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக