1991 ஜூன் இரண்டாவது வாரத்தில்! நாளேடுகள் அனைத்தும் எட்டு காலச் செய்தியாக்கி, நீட்டி முழக்கி எனது 'பெரு மைகளை' வெளியிட்டு, குடும்பத்தினர் நிழற் படங்கள் பிரசுரித்துத் தீவிரவாதி யாக்கி, சட்ட விரோதக் காவலில் வைத்த பொழுதுகள் அவை!
கிழக்குக் கடற்கரைச் சாலை, வெட்டு வாங்கேணியில் அமைந்திருந்த எனது எளிய இல்லத்தை அதிரடிப் படையோடு சுற்றி வளைத்து, சி.பி.ஐ அதிகாரிகள் ராஜூ, பாஸ்கரன், சிவாஜி, 'அடியாள்' மாதவன் உள்ளிட்ட குழுவினர் உள்ளே பாய்ந்து எனைக் கைது செய்த போது,
அந்தக் குழுவில் இருந்தவர்களில் ஒருவர் தான் திரு.ரகோத்தமன்!
எத்தனை எத்தனை நெருப்பு வளை யத்துள் நிற்கின்ற நிலை வந்த போதும், அப்போதே பீறிட்டு வரும் நகைச்சுவை உணர்வுகள்..'மைன்ட் வாய்ஸ் ஆக' இன்ற ளவும் எனக்குள் ஊறி வருவது இயல்பு!
நொடிப் பொழுதுகளில் எனைச் சுற்றி வளைத்து கைகளைப் பின்னால் வைத்துக் கட்டியவர்களை, அந்த விடியற் காலை இரண்டு மணி வெளிச்சம் கலந்த இருட்டில் ஊடுறுவிக் கவனித்த போது,
எனக்கு கருநீலநிற சபாரியும், கண்ணாடி யும் அணிந்து இருந்த ரகோத்தமனைப் பார்த்த மாத்திரத்தில் உள்ளுக்குள் 'பயங் கர' சிரிப்பு பீறிட்டது.
காரணம், 'பூனை மீசை'எப்படி இருக்குமோஅப்படிஒரு மீசை! பார்க்க 'ஜோக்கரைப்'போலவே இருந்தது! 'அடியாள்' மாதவன்..கண்கள் மட்டுமே வெளிச்சம்..தொட்டால் ஒட்டிக் கொல்லும் கருமை நிறம்..'கறிக்கடை பாய்' தோற்றம்!
நிற்க. என்னையும், என் வீட்டில் இருந்த நான்கைந்து மூட்டை புத்தகங்கள், இயக்க ஆவணங்கள், தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆயுதங்கள் பற்றிய முறை யான பயிற்சி ஏடுகள், கைக் குண்டுகள் பற்றிய செய்முறை ஏடுகள் என அனைத் தையும் அள்ளிப்போட்டு கொண்டு சென் றனர் நான்கு வாகனங்களில்! 'மல்லிகை' இல்லத்தில் வைத்து விசா ரணைகள் ஒருவர் மாற்றி ஒருவர் எனத் துருவித் துருவி நடத்தப்பட்டபோது
'மனித நேயத்துடன்' விசாரித்த பெருந்தகைதான் இந்த ரகோத்தமன்!
விசாரித்துக் கொண்டே, எனது விரல் இடுக்கில் பென்சிலைச் சொருகிப் பிடித் துக் கொண்டே, தனக்குத் தேவையான செய்தியைக் 'கறக்க' விரல்களை அழுத்தி பிடித்து..சிறு எலும்புகள் நொறுங்கிடும் வண்ணம் அழுத்தி அழுத்திப் பிடித்து, நாம்வேதனையில் துடிக்கும் போது நடிகர் பாலையாவைப் போல உடல் குலுங்கக் குலுங்கச் சிரித்து மகிழும் 'சேடிஸ்ட்' அவர்!
இடையிடையே..'மியாவ்..மியாவ்'..எனப் பூனை போலக் கத்திக் காட்டுவார்.
அந்த மீசையும், உருட்டும் முட்டைக் கண்ணும், அதட்டலும், ஆக்ரோசமும் என் ஒரு மயிரையும் புடுங்கமுடியவில்லை .ஏனென்றால், என்னிடம் உண்மையைத் தவிர வேறொன்றும் எப்போதுமில்லை!
(இந்த வழக்கிலிருந்து என்னை விடுவித்தவர் மூத்த வழக்கறிஞர் துரைசாமி ஐயா.
அது தனிக் கதை) கதை-வசனம் எழுதிய குழுவினரோடு கூடிக் கும்மியடித்து, அருமைத் தம்பி பேர றிவாளன் உள்ளிட்டோரை மரணச் சிறை ஏகச் செய்த ரகோத்தமன் சாவு,
கொடிய கொரானாவில் நிகழ்ந்திருப்பது அறிய.. இயற்கையின் கணக்கு-வழக்கு புரிந்து வியக்கின்றேன்! போய்வாருங்கள் ஐயா ரகோத்தமனே!
நசுங்கிய என் விரல் எலும் பில் அவ்வப்போது வலி வருகின்றபோது எல்லாம் உங்கள் உறவுகள் மறந்தாலும் நான் உங்களை மறக்க மாட்டேன்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக