எஸ் ஜே சாதிக் பாட்சா |
Siddique Kovai : இன்று எஸ் ஜே சாதிக் பாட்சா அவர்களின் நினைவு நாள்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய தூணாக விளங்கிய சாதிக் அய்யாவை பற்றிய சில குறிப்புகள் .
மூன்று முறை உடுமலைப்பேட்டை தொகுதியிலிருந்தும் ஒருமுறை ஆயிரம்விளக்கு தொகுதியிலிருந்தும் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்..
அண்ணா மற்றும் கலைஞர் தலைமையிலான அமைச்சரவைகளில் அமைச்சராகப் சிறப்பாக பணியாற்றினார்.
அரசு பதவியை எந்தக் காரணத்துக்காகவும் தன் சொந்த இலாபத்துக்காகப் பயன்படுத்தாதவர்.
மூன்று முறை அமைச்சராக இருந்தபோதிலும் சென்னை பட்டினப்பாக்கத்தில் அரசு குடியிருப்பில் வாடகை வீட்டில் குடியிருந்தவர்.
1977 முதல் மே 12. 1994 (இறக்கும் வரை) கழகத்தின் பொருளாளராகப் பொறுப்பு வகித்தவர்.
“கழகத்தின் வெற்றியிலும்-தோல்வியிலும்,
சோதனையிலும்-சாதனையிலும்,
கொடிய வெயிலிலும்-நிழலிலும் கூடவே இருந்து அசையாத மலையாக எதற்க்கும் ஊசலாடாத இதயத்துடன் நமக்கு துணையாக இருந்த தங்கத்தூண் சாய்ந்துவிட்டதே” என தலைவர் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்..
எளிமையான மனிதரின் நினைவுநாளில் அவர் பெருமை போற்றுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக