இதையடுத்து கோவை தெற்கு தொகுதி மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது..!
கோவை தெற்கு தொகுதி ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பில் வாக்காளர்களை வைத்திருந்த தொகுதியாகும்.. நாளுக்கு நாள் இந்த தொகுதியின் பிரச்சாரங்கள் வைரலாகின..
தேர்தலுக்கு முந்திய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் பல வெளிவந்தாலும், இந்த தொகுதியின் வெற்றி குறித்து கடைசிவரை யாராலும் எதையும் உறுதியாக சொல்ல முடியாமலேயே இருந்தது.
சறுக்கல் அதனால், இந்த தொகுதியின் ரிசல்ட் அளவுக்கு அதிகமாகவே எதிர்பார்க்கப்பட்டது..
அதுவும் ரிசல்ட் தினத்தன்று, மக்களுக்கே பிரஷர் எகிறிவிட்டது..
ஆனால் கமல் சறுக்கலை சந்தித்தார்.. அதிலும் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.. அதுவும் கடைசி நேரத்தில் தவறவிட்டார்.
அப்செட் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் கமல்ஹாசனை வீழ்த்தினார்.
அதனால்தான், மய்ய உறுப்பினர்களால் இந்த தோல்வியை இப்போது வரை ஜீரணிக்கவே முடியவில்லை.. கமல் ரொம்ப அப்செட் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வந்தன.
அப்செட் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் கமல்ஹாசனை வீழ்த்தினார். அதனால்தான், மய்ய உறுப்பினர்களால் இந்த தோல்வியை இப்போது வரை ஜீரணிக்கவே முடியவில்லை.. கமல் ரொம்ப அப்செட் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வந்தன.
கோரிக்கை ரிசல்ட் வந்த உடனேயே, மய்யத்தினரின் மறுவாக்கு எண்ணிக்கை என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.. வானதி சீனிவாசனுக்கு வெற்றி சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று கோவை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.. ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி சார்பில் கோவை தெற்கில் சுயேட்சையாக போட்டியிட்ட ராகுல் காந்தி என்ற வேட்பாளர் இதுதொடர்பாக கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.
அதில், "வானதி சீனிவாசனின் வெற்றியில் சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை தீர்க்க வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாக்கப்பட வேண்டும். எனவே இங்கு மறு வாக்கு எண்ணிக்கையை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார். இதைதவிர சென்னை ஹைகோர்ட்டிலும் மறுவாக்குப்பதிவு வேண்டும் என்று மனு கோரியிருந்தார்.
விசாரணை
அந்த மனுவில், "மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்ததால் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றிப் பெற்றுள்ளார்... எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரியுள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது... சுயேச்சையாகப் போட்டியிட்ட கே.ராகுல் காந்தி 73 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை கோவையில் மறுபடியும் வாக்குப்பிதவு நடத்ல், மறுபடியும் நமக்கெல்லாம் டென்ஷன் எகிற ஆரம்பித்துவிடும்போல..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக