இதையடுத்து ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி 16 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதைத் தவிர்த்து புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது.
அதன்படி இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சகம் கே.வெங்கடேசன், விபி.ராமலிங்கம் மற்றும் ஆர்.பி.அசோக் பாபு உள்ளிட்ட மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்துள்ளது.
இதில் நியமிக்கப்பட்டுள்ள கே.வெங்கடேசன் கடந்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கடந்த மார்ச் மாதம் தனது சட்டமன்ற பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்தார். விபி.ராமலிங்கம் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சபாநாயகராக இருந்து சிவக்கொழுந்துவின் இளைய சகோதரர். அடுத்து ஆர்.பி.அசோக் பாபு புதுச்சேரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆளும் கட்சி சார்பில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ள நிலையில், மேலும் 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் மூலமாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 19ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக