புதன், 12 மே, 2021

அனைத்து மருத்துவர்களுக்கும் Group Term Life Insurance Policy செலவு குறைவு பாதிப்புக்க 25 லட்சத்திற்கு பதிலாக ஒரு கோடிக்கு மேல் கொடுக்கவும் முடியும்.

 Karthikeyan Fastura  :  உயிரிழப்புகள் ஏற்படும் என்று அறிந்தும் எதிர்த்து போராடுவதால் தான் ராணுவவீரர்களின் இறப்புக்கு ராணுவமரியாதை கொடுக்கப்படுகிறது.
கண்ணுக்கு தெரிந்த எதிரியை விட தெரியாத எதிரியான இந்த வைரஸை எதிர்த்து போராடி பல உயிர்களை காக்கும் மருத்துவ முன்களபணியாளர்களுக்கும் அதேவிதமான மரியாதையும், இழப்பீடும் கொடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வெகுநாளாக பலரால் எழுப்பப்பட்டு வந்தது.
அதனை ஒன்றிய அரசும், இதற்கு முன்பிருந்த மாநில அரசும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. இப்போதுள்ள திமுக அரசு கொரோனாவினால் இறக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களபணியாளர்களுக்கு 25லட்சம் அறிவித்திருப்பது சிறப்பு. அவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருப்பது அதனினும் சிறப்பு.
உண்மையில் இது நோயாளிகளுக்கு தான் பெரும் பயனை கொண்டுபோய் சேர்க்கும்.
தமிழ்நாடு அரசிற்கு ஒரு யோசனை. இதுவரை அரசு பணியாளர்களுக்கு  Medical Insurance எடுத்து கொடுத்திருப்பீர்கள். அது மருத்துவ செலவுகளை ஈடுகட்ட உதவும். உயிரிழப்பிற்கு அல்ல. உயிரிழப்பிற்கு Term Life Insurance  எடுக்க வேண்டும்.


அனைத்து மருத்துவர்களுக்கும் Group Term Life Insurance Policy எடுத்தால் அரசிற்கு செலவும் குறைவு. பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு  25 லட்சத்திற்கு பதிலாக ஒரு கோடிக்கு குறைவில்லாமல் உடனடியாக கொடுக்க முடியும்.
கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இன்றுவரை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எவ்வளவு காப்பீடு எடுத்தாலும் அதை குறைவின்றி கொடுத்துவருகிறார்கள்.
இந்த பாலிசியில் ஆண்டிற்கு ஒரு பணியாளருக்கு ஒரு கோடி ரூபாய் காப்பீட்டிற்கு வெறும் 6000 ரூபாய் மட்டுமே ஆகும். இதே மருத்துவர்கள் அவர்களுக்காக தனியே எடுக்கும்போது ஆண்டிற்கு 12,000 முதல் 1.2 லட்சம் ரூபாய் வயதிற்கு ஏற்ப ஆகும்.
நிதி அமைச்சரும்,முதலமைச்சரும் இதனை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்    

கருத்துகள் இல்லை: