Umamaheshvaran Panneerselvam : இதுகாறும் உணர்வுகளைத் தூண்டிவிட்டு
வியாபாரம் பார்த்த கட்சிகள், இயக்கங்கள், புரோக்கர்களுக்கு படியளந்து தமிழர்களின் வாழ்வு தாழ காரணமாக இருந்த NRI மக்கள், புலம்பெயர்ந்தோர் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு.
தமிழ்நாடு கொரோணாவிலிருந்து மீள தமிழக அரசுக்கு நேரடியாக உதவுங்கள். இடைத்தரகர்கள், நானே போய் நேரா நோயாளிக்கிட்ட கொடுக்கிறேன் சார், "கார்ட் மேலே உள்ள 16 டிஜிட் நம்பர் சொல்லுசார்" வகை கூட்டத்திடம் காசை அழாமல் , வெளிப்படையாக கணக்கு காட்டும் தமிழக அரசுக்கு கொடுத்து உதவுங்கள்.
இது முதற்படி மட்டுமே. நாளை இந்திய ஒன்றியத்தை எதிர்நோக்காமல் பல்வேறு திட்டங்கள், வேலைவாய்ப்புகளுக்கு நாம் அயல்நாடுகளுடன் உரையாட வேண்டிய தருணம் நெருங்கிவருவது கண்கூடு.
பொருளாதார வலிமை,தன்னிறைவு பொருளாதாரம் என பீடுநடைபோட காலம் வருகிறது .
பலமுறை எழுதியும் பேசியும் வந்ததைத் தான் மீண்டு பகர விழைகிறேன். இந்திய ஒன்றியத்தில் நமக்காக பங்கைவிட Aisa-pacific பகுதியில் தமிழ்நாட்டின் குவி மையம் இனி இருக்கப்போகும் காலம் வருகிறது. அதன் முதற்படி தான் அமைந்துள்ள இந்த அரசு.
முதலமைச்சர் ஏன் ப்ரோ இப்படி Crowd funding செய்கிறார்..ஹி ஹி ஹி என்று சில இந்துத்துவ மாக்கான்கள் ஏகடியம் செய்கிறார்கள்.
அந்த அரைலூசுகளுக்குப் புரியாதது இந்தியா ஏற்கனவே Crowd Funding என்ற முறைமையில் தான் இயங்குகிறது. அதன் பெயர் தான் Tax.
அதை ஒழுங்காக இந்த ஒன்றிய அரசு GST return கொடுத்திருந்தால் இந்நேரம் முக்கால்வாசி குறைபாடுகள், பற்றாக்குறையைத் தீர்த்திருக்க முடியும். அதை கொடுக்கவும், வாங்கவும் மனதில்லாத, முதுகெலும்பில்லாத ஆட்கள் கொண்டுவந்து சேர்த்த பிணியை விரட்டியடிக்க இனிமேல் தான் தொடர்வோட்டம் தேவைப்படும்.
TamilNadu is a state within State என்பார்கள். அதை மெய்ப்பிக்க வேண்டியதன் ஓட்டம் இன்று முதல்நடை வைத்திருக்கிறது. நெடுங்காலத்திற்குப் பிறகு.
The south will prevail.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக