நெருக்கடி கால கொடுமைகள் அவரை எந்த அளவுக்குத் துளைத்தெடுத்தது?
மு.க.ஸ்டாலின் சிறைச்சாலையில் பட்ட துன்ப துயரங்களை அன்பழகன் எடுத்து சொன்னார்.
அந்த நேரத்தில் கொழு கொம்பாக இருந்து ஸ்டாலினைக் காப்பாற்றியவர்கள், சிறைச்சாலையிலிருந்து மீட்டுத் தந்தவர்கள் என்ற வரிசையில் முதலில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர்தான் ஆற்காடு வீராசாமி.
வீராசாமி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்,
சிட்டிபாபு இல்லாமல் இருந்திருந்தால்,
அப்படி தன்னைப் பற்றிக் கவலைப்படாமல்,
இயக்கத்தின் தோழர்கள் வாழ வேண்டும், மீள வேண்டும், காப்பாற்றப்பட வேண்டும் என்ற அந்தக் கவனம், இன்றைக்கும் திமுகவில் தொடருகின்ற காரணத்தினால்தான், நம்மை யாரும் அசைக்க முடியவில்லை,
யாரும் வீழ்த்த முடியாமல், யாரும் அகற்ற முடியாமல், யாரும் பலவீனப்படுத்த முடியாமல் அவ்வளவு பலமாக இந்த இயக்கம் வளர்ந்திருக்கின்றது.
பெரியாரால் விதை ஊன்றப்பட்டு, அண்ணாவால் வளர்க்கப்பட்டு, இன்றைக்கு வைரம் பாய்ந்த மரமாக ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், அது தமிழகத்தில் திமுக தான்.
நாம் இந்த இயக்கத்தை வளர்க்க பட்டபாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அப்படிப் பாடுபட்டு, காக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு அன்றும் சரி, இன்றும் சரி, துணையாக இருப்பவர்களில் ஒருவர்தான் ஆற்காடு வீராசாமி
oOo
ஆற்காடு வீராசாமி அவர்கள் பற்றி செயல்தலைவர்
மிசா காலத்தில் அடக்குமுறைக்குப் பயந்து பலர் திமுக இயக்கத்தைவிட்டே வெளியேறிச் சென்றபோது, என் உயிரே போனாலும் திமுக-வை விட்டுச் செல்லமாட்டேன் என்றவர் ஆற்காடு வீராசாமி.
இதுபோன்ற கழக முன்னோடிகளால்தான் எல்லாச் சோதனைகளையும் தாங்கி திமுக இன்று நிலைத்து நிற்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக