பாலகணேசன் அருணாசலம் : சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அந்த மருத்துவமனைக்கு தேவையான முழு அளவிளான ஆக்ஸிஜனையும் தயாரிக்கும் வசதி இருக்கிறது.
இது நேற்றைய சன் டிவி விவாதத்தில் நெறியாளர் குணசேகரன் சொன்னப் பிறகு தான் வெளிச்சத்துக்கே வருது.
ஒரு அரசு மருத்துவமணைக்கு சொந்தமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி இருக்கிறது என்பதோ, அப்படி ஒரு தொலை நோக்கு திட்டத்தை தீட்டி செயல்படுத்தியவர் கலைஞர் என்பதையோ யாரும் பேசி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை
இப்படிப்பட்ட ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டத்தை தந்த தலைவரும் இதை பெரிதாக பேசவில்லை. நிச்சயம் உடன்பிறப்புகளுக்கான கடித்தத்தில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் இதன் அருமை தெரியாத நாமும் அதை சாதாரணமாக கடந்துப் போயிருப்போம்.
இந்த தலைவரைத்தான் இங்கேயே ஒரு கூட்டம் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது, கொண்டிருக்கிறது, அவர் மறந்த பின்பும் அது குறைந்தபாடில்லை.
ஆனால் அந்த தலைவர் தான் நாம் மூச்சு விட முடியாத போது கூட நமக்கு துணையிருக்க கூடிய வகையிலான ஒரு கட்டுமானத்தை உருவாக்கி தந்துவிட்டு போயிருக்கிறார்
Sundar P : சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை (GH -1664) உலகிலேயே 8 வது பெரிய மருத்துவ மனை....
7 வது இடத்தில் இருக்கும் அகமதாபாத் சிட்டி ஹாஸ்ப்பிட்டல் வெள்ளையர் காலத்தில் 1858 இல் கட்டபபட்டது...
மதுரை இராஜாஜி மருத்துவ மனை உலகின் 12 வது பெரிய ஆஸ்பத்திரி.
உலகின் 15 ஆவது பெரிய ஆஸ்பத்திரி திருநெல்வேலி அரசு மருத்துவ மனை ஆகும். உலக அளவில் பட்டியலிடப்பட்ட 40 உயர் தர மருத்துவ மனைகளில், ஆறு மனைகள் இந்தியாவில் இருக்கின்றன
அவற்றில் நான்கு தமிழ் நாட்டிலும், ஒன்று குஜராத்திலும், ஒன்று கர்நாடகத்திலும் உள்ளது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக