அதில் இரண்டு விஷயங்கள்.
அம்மா அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முனையவில்லையே என்ற கேள்வி ஒன்று. திகிலடித்துப் போயிருக்கலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால், அந்தத் தாய் பார்வையற்றவர். அதனால்தான் பையனின் குரலைக் கேட்டு எங்கே எங்கே என்று தடுமாறுகிறார். (செய்தியில் பார்த்தேன்.)
இன்னொரு விஷயம் என் ஊகம். வீடியோவை கவனமாகப் பார்த்தபோது அதை கவனித்தேன் —
விழுந்தது தெரிந்ததும் ஓடி வருகிறார்.
ஆனால் ஓடிவரத் துவங்கியபிறகு தன் உயிர் பற்றிய அச்சம் வருகிறது.
ஒரு கணம், ஒரே ஒரு இமைப்பொழுது, தண்டவாளத்திலிருந்து அந்தப்பக்கம் போய்விடலாம் என்று நினைக்கிறார்.
ஆனால் மனதுக்குள் தொலைவையும் ரயில் வேகத்தையும் கணக்கிடுகிறார். காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை வருகிறது.
மறுபடி ஓடுகிறார். அந்த நான்கைந்து விநாடிகளுக்குள் என்ன வேகமாக அவருடைய மனது கணக்குப் போட்டிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அபாரமான presence of mind.
அந்த ஒரு கணத்தின் தடுமாற்றத்தை, அதை வென்று அவர் ஓடுவதை, வீடியோவில் 18-19ஆம் நொடிகளில் கவனிக்கலாம்.
#salute_mayur_shelke
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக