maalaimalar : வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் எங்கும் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். சென்னை: தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. எங்கும் எந்த விதி மீறலும் நடைபெறவில்லை. வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலையில் ஆலோசனை வழங்க உள்ளது.
2-ந்தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
வாக்குகள் எண்ணுவதற்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி தகுந்த இடைவெளியுடன் மேஜைகள் போடப்படும். சிறிய தொகுதிகளுக்கு 14 மேஜைகளும், பெரிய தொகுதிகளுக்கு 30 மேஜைகளும் போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக