சனி, 24 ஏப்ரல், 2021

தமிழ்நாட்டின் மருத்துவ வளர்ச்சியின் வரலாறு . கல்லூரிகளின் பட்டியல்

A Sivakumar : இனி யாராவது அதிகமாக தமிழ்நாட்டுல மருத்துவக்கல்லூரிகள் கட்டியது யார் என்றால் இதை பயன்படுத்தக் கொள்ள விழைகிறேன். திமுகவும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளும் >ஆங்கிலேயர் காலத்தில் உருவான மருத்துவக் கல்லூரிகள் : 3
♦ மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்
♦ ஸ்டேன்லி மெடிக்கல் காலேஜ்
♦ கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ்
காங்கிரஸ் ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று, பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டப்பட்டு திறக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் : 5
♦ மதுரை மெடிக்கல் காலேஜ்
♦ தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்
♦ கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ்
♦ திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்
♦ செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ்
திமுக ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டப்பட்டு திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் : 5
♦ திருச்சி மெடிக்கல் காலேஜ்
♦ தூத்துக்குடி மெடிக்கல் காலேஜ்
♦ திருவாரூர் மெடிக்கல் காலேஜ்
♦ தர்மபுரி மெடிக்கல் காலேஜ்
♦ விழுப்புரம் மெடிக்கல் காலேஜ்
திமுக ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டுமானம் தொடங்கி ஆட்சிமாற்ற காரணத்தால் மட்டுமே அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் : 5
♦ கன்னியாகுமரி மெடிக்கல் காலேஜ்
♦ வேலூர் மெடிக்கல் காலேஜ்
♦ சிவகங்கை மெடிக்கல் காலேஜ்
♦ திருவண்ணாமலை மெடிக்கல் காலேஜ்
♦ புதுக்கோட்டை மெடிக்கல் காலேஜ்
அதிமுக ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டி முடித்து அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் : 3
♦ சேலம் மெடிக்கல் காலேஜ்
♦ பெருந்துறை மெடிக்கல் காலேஜ்
♦ தேனி மெடிக்கல் காலேஜ்
இதில் எம்ஜிஆர் உருவாக்கியது 2
ஜெயலலிதா உருவாக்கியது 1.
திமுக ஆட்சியில் தலைமை செயலகமாக உருவாக்கப்பட்ட ஓமந்தூரார் கட்டிடம் ஜெயலலிதாவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது; 1.
நமக்கு அந்த காழ்ப்புணர்ச்சியே தேவையில்லை. அதை அவர்கள் கணக்கில் வைத்தால் கூட மருத்துவக்கல்லூரிகள் கட்டமைப்பில் கலைஞரின் கால் தூசுக்கு ஈடாகமாட்டார்கள் எம்ஜிஆரும் ஜெயாவும்.
~~~~~~~~
திட்டம் தீட்டி
MCI அனுமதி பெற்று
பட்ஜெட் ஒதுக்கி
அடிக்கல் நாட்டி
கட்டி முடித்து
ஒரு மருத்துவக் கல்லூரியை உருவாக்குவதில் பெரும் பங்கு இந்த நான்கை செய்தவருக்கு சென்று சேருமா? சொகுசாக காணொலி காட்சி மூலம் திறந்து மட்டும் வைத்தவருக்கு சென்று சேருமா?
ஆக,
சுதந்திரத்திற்கு முன்பே இருந்தவை - 3
காமராஜர் - 4 மருத்துவக் கல்லூரிகள்
(10 வருடங்கள்)
பக்தவசலம் - 1 மருத்துவக் கல்லூரி
(4 வருடங்கள்)
கலைஞர் - 10 மருத்துவக் கல்லூரிகள்
(19 வருடங்கள்)
MGR - 2 மருத்துவக் கல்லூரிகள்
(10 வருடங்கள்)
ஜெயலலிதா - 1 மருத்துவக் கல்லூரி
(16 வருடங்கள்)
ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி - 1
பிரிட்டிஷ் : 3
காங்கிரஸ்: 5
திமுக : 10
அதிமுக : 3 + 1
இதில்லாமல்...
♦ காங்கிரஸ் காலத்தில் சென்னை சித்த மருத்துவக் கல்லூரி
♦ திமுக ஆட்சிக்காலத்தில் நாகர்கோவில் ஆயுர்வேத கல்லூரி
♦ அதிமுக ஆட்சிக்காலத்தில்
சென்னை சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா கல்லூரிகள்
உண்மை நிலவரம் இப்படியிருக்க திமுக வரிசையாக பெற்ற தன் பிள்ளைகளுக்கு வெட்கம் ஏதும் சிறிதுமல்லால் தங்கள் இனிசீயலை போட்டு மகிழ்வதில் அதிமுகவினருக்கு தான் என்னே மகிழ்ச்சி.
முதலில் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று எந்த குறிப்புமில்லாத ஒரு பட்டியலின் புகைப்படம்.
பின்னர் MCI இணையதளத்தில் இருக்கிறதே...என்று வியாக்கியானம்.
Allopathy, Ayurvedam, Homoeopathy, Siddha அனைத்தையும் கலந்துக்கட்டு ஒரு குழப்படி
என்று எப்படியெல்லாம் நிர்வாணமாய் ஓடுகிறார்கள்.
MCI ஒரு Statutory Body. அது எந்த ஆண்டில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டதோ அதை மட்டுமே குறித்து வைக்கும். மற்றபடி அந்தந்த மாநிலத்தில் யாருடைய ஆட்சியில் கல்லூரிக்கான திட்டமிடல், அனுமதி, அடிக்கல், கட்டமானம் நடந்தது என்பதையெல்லாம் அது தராது. ஏன்னா அதோட வேலை அதுவல்ல.
இதெல்லாம் இவர்களில் யாருக்குமே தெரியாதா? புரியாதா?
நல்லாவே தெரியும், புரியும்.
நீட் விவகாரம் தொடங்கி அரசு பொது மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வரை அடிமை அதிமுக அரசை நாம் தோலுரித்து தொங்க விட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் பதிலளிக்க வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக கிட்டியது.
தவறான தகவல்களுடன் ஒரு பட்டியல் வெளியானவுடன்...இது வரை பிஞ்சு போயிருந்த தங்கள் முகத்தை இதைக் கொண்டு பூசி மெழுகும் முயற்சியில் இறங்கினார்கள்.
100 பேருக்கு இந்த பொய்யை சொல்லுவோம்.
50 பேர் எதிர்ப்பான்,
25 பேர் படிக்கவே மாட்டான்,
25 பேர் நம்புவான்...
25 சதவிகிதம் நாம் பரப்பிவிடும் பொய் நம்பினாலே போதும் என்ற கையறு நிலை தான். பாஜகவுடன் சேர்ந்துவிட்ட காரணமோ என்னவோ...மன்மோகன் கால திட்டங்களை எல்லாம் திறந்து வைத்த மோடுமுட்டி அதையெல்லாம் தன்னுடைய திட்டம் போல விளம்பரப்படுத்தவில்லையா? அதே வேலையில் இவர்களும் இறங்கிவிட்டனர்.
தங்களுடைய கட்சி, தலைவர்கள், ஆட்சிக்கால செயல்பாடுகள் என்பதைப் பற்றியெல்லாம் எதையுமே தெரிந்துக்கொள்ளாமல் மண்ணுக்கே பாரமாய் வாழும் சோற்றாலடித்த பிண்டங்களான அதிமுக அல்லக்கைகளுக்கு தெரியாத இரு விஷயங்களை சொல்லி இந்த பஞ்சாயத்தை நிறைவு செய்வோம்.
விஷயம் 1:
மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்துக்கான அனுமதியை தந்தவர் பிரதமர் வி.பி.சிங். பெற்றுத்தந்தவர் தலைவர் கலைஞர் (1989-91 ஆட்சிக்காலம்). அதற்கு முன்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்க மாநிலரசுக்கு அனுமதி கிடையாது. அதனால் தான் காமராசர் காலத்தில் மதுரை, தஞ்சாவூர் என்று தூரம் தூரமாக மருத்துவக் கல்லூரிகள் அமைந்தன.
விஷயம் 2:
ஜானகி எம்ஜிஆர் நாட்கணக்கில் முதல்வராக இருந்த நேரத்தில் சிந்தனை வடிவில் உருவான திட்டம் தான் சென்னை கிண்டியிலிருக்கும் Dr.MGR Medical University.
ஜானகி போய் கவர்னர் வர ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம் யாரும் அது குறித்து வாயே திறக்கவில்லை. 1989ல் கலைஞர் தலைமையிலான திமுக அரசு அமைந்தவுடன் பல்கலைகழக அனுமதி பெற்று முதல்வர் கலைஞர் அந்த திட்டத்திற்கு உயிரூட்ட முயன்ற நேரத்தில் மீண்டும் ஆட்சிக்கலைப்பு.
1991-1996 ஆட்சியில் தன்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் எம்ஜிஆர் என்ற நன்றிக்கு கூட அக்கட்டிட பணியை முடிக்காமல், கிடப்பில் போட்டவர் அம்மையார்.
1996 திமுக ஆட்சியில் மீண்டும் கலைஞர் முதல்வரானதும் அப்போதைய துணை குடியரசுத் தலைவர் கிருஷ்ணகாந்த் அவர்களை வைத்து அக்கட்டித்தை திறந்தவர் டாக்டர் கலைஞர்.
இதில் கூடுதல் சிறப்பு என்ன தெரியுமா?
இன்று அரண்மனை போல் நிமிர்ந்து நிற்கும் கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக கட்டிட வரைவை உருவாக்கியதே தலைவர் கலைஞர் தான்.
இதெல்லாம் இந்த அதிமுக கழிசடைகளுக்கு எங்கே தெரியப்போகிறது.
எம்ஜிஆருக்கு பின் அதிமுகவை கைப்பற்றி எம்ஜிஆரையே தூக்கி குப்பையில் வீசியவர் தான் ஜெயலலிதா.
அது குறித்து வாயே திறக்காமல் அன்று ஜெயாவுக்கு கொடி பிடித்தவர்களையும்...
ஜெயலலிதாவை கொன்று புதைத்த எடப்பாடி & ஓபிஎஸ் கூட்டத்தை இன்று ஆதரிப்பவர்களையும்...
கழிசடைகள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
A Sivakumar

கருத்துகள் இல்லை: