கேரளாவில் பிறந்து 30 வயதுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த திரு. ராமச்சந்திரன் மலையாளியாக தெரியமாட்டார்.!
மைசூரில் பிறந்து, பெங்களூரில் தனது ஆரம்பக் கல்வியை முடித்து பிழைப்புக்காக சென்னைக்கு வந்த செல்வி. ஜெயலலிதா கன்னடராக தெரியமாட்டார்..!
இவ்வளவு ஏன், கேரளத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்து, தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்த அவர்களின் தலைவர் திரு. சீமான் மலையாளியாக தெரியமாட்டார்...!
ஆனால், நமக்குத் தெரிந்து மூன்றாம் தலைமுறையாக தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த கலைஞர் மட்டுமே அவர்களுக்கு தெலுங்கராக தெரிவார்.!
அதனைத் தொடர்ந்து வந்து சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்தும் முன்னெடுத்தது, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை குறைத்து தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை முன்வைத்த அரசியல்..!
இதையே நாம் தமிழர் தம்பிகள் வேறு வடிவத்தில் முன்வைக்கின்றனர்.!
சரி, ஒருவேளை இவர்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறதோ என்று எண்ணி, யாரெல்லாம் தெலுங்கர்கள் என்று கேட்டால்...
முதலியார் மற்றும் பிள்ளைகளையும் தெலுங்கர்கள் Listல் சேர்த்துள்ளனர்..!
இன்னொரு ஆச்சரியமான விவாதமாக...
"தமிழர்களான பார்ப்பனர்களை" ஒதுக்கி விட்டு தெலுங்கர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்குறீர்கள் என்கின்றனர்.!
பெரியார் அணையிலிருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தும் தேனி, மதுரை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு இணையாக, தமிழ்நாட்டில் உள்ள 40 லட்சம் மலையாளிகளைப் பற்றி நாம் தமிழர் தம்பிகள் பேசவே மாட்டார்கள்.!
மேலும் நாம் தமிழர் தம்பிகளோடு விவாதிக்கும் பொழுது கலைஞர் கச்சத்தீவை கொடுத்து விட்டார் என்று பேசுவார்கள்,
ஸ்ரீஹரிகோட்டா, திருப்பதி, சித்தூர், கோலார் கோல்டு ஃபீல்டு (KGF), குடகு...
மலம்புழா, சிறுவாணி, பரம்பிக்குளம் அணைகள் உள்ள மண்ணாற்காடு, பாலக்காடுகளின் ஒரு பகுதி, மூணாறு, தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகளை விட்டுக் கொடுத்த காமராஜர் பற்றி பேசமாட்டார்கள்.!
சரி இவர்கள் கூறும் தமிழர்கள் ஆட்சி என்ற திரு. காமராஜர் தலைமையிலான கட்சியின் திரு. பக்தவச்சலம் ஆட்சியில், ஹிந்தியை எதிர்த்து போராடிய தமிழ் இளைஞர்களை சுட்டுக்கொன்ற திரு. கக்கனைப் பற்றி பேசமாட்டார்கள்.!
இவர்கள் கூறும் அண்ணன், சித்தப்பா என்ற, தமிழர் சாதிகளை சேர்ந்த திரு. பன்னீர்செல்வம் திரு. பழனிச்சாமி ஆட்சியில் தமிழர்களின் வளங்களும், உரிமைகளும் பறிபோனதைப் பற்றி பேசமாட்டார்..!
காரணம் நாம் தமிழர் தலைவர் சீமான்..
RSSன் வளர்ப்பு..!
அதனால்தான், திமுகவை மட்டுமே குறிவைத்து தாக்குகின்றனர்.!
இளைஞர்களை முறையாக அரசியல்படுத்தவில்லை என்றால்...
தமிழ்நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக