ஒரு எலக்ட்ரானிக் இயந்திரத்தில் கம்பிவழி மூலமாக ஊடுருவுவது என்பது நாம் அதே மாதிரி இன்னொரு எலக்ட்ரானிக் இயந்திரத்தை வடிவமைத்து இயக்குவதால் மூலமே சாத்தியப்படும். அப்போது தான் கட்டுப்பாட்டு பிரிவு சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை திருடவோ திருத்தவோ முடியும்.
உதாரணத்துக்கு நான் உங்கள் ஐ ஃபோனை ஊடுருவ வேண்டுமென்றால் முதலில் நான் ஐ ஃபோன் பயன்படுத்தும் iOS ல் இயங்கக்கூடிய ஒரு மென்பொருளை எழுதவேண்டும். அந்த மென்பொருளை உங்கள் மொபைல் போனுக்குள் செலுத்தவேண்டும். அப்போ தான் அது ஊடுருவல்.
தேர்தல் வாக்கு இயந்திரங்கள் ஊடுருவல் குறித்த ஒரு செயல் விளக்கம் தர முன்வந்த அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் இம்மாதிரியான முன் தயாரிக்கப்பட்ட இயந்திரத்தை, தேர்தல் வாக்கு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பிரிவுடன் செயற்கையாக கம்பிவழி மூலம் இணைத்தே ஊடுருவல் நிகழ்த்தினர். இதே செயல் விளக்க முறையை தான் சென்றாண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியும் நடத்தி காட்டியது.
கம்பியில்லா ஊடுருவல்
இதில் நாம் எலக்ட்ரானிக் இயந்திரத்துடன் நேரடி தொடர்பு கொள்ளத்தேவையில்லை எனினும் நமக்கு அதன் கட்டுப்பாட்டு பிரிவை குறித்த புரிதல் இருக்க வேண்டும். மேலும், நாம் ஒரு எலக்ட்ரானிக் இயந்திரத்துடன் கம்பியில்லா வழியில் ஊடுருவ வேண்டுமென்றால், நாம் அனுப்பும் தகவல்களை கிரகிக்கும் ஆண்டெனா ஒன்று அந்த இயந்திரத்தில் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும், இல்லையேல் நாம் ஊடுருவ முடியாது. இந்திய தேர்தல் கமிஷன் வாக்கு இயந்திரத்தில் அப்படியான ஆண்டெனாக்கள் எதுவும் இல்லையென்று சொல்கிறது.
ஒரு வேளை கம்பியில்லா வழியில் ஊடுருவ ஒருவர் ஒரு ஸ்பெஷல் இயந்திரத்தை வடிவமைத்திருந்தாலும், வாக்கு இயந்திரத்தில் அவரனுப்பும் தகவல்களை கிரகிக்கும் ஆண்டெனா பொறுத்தப்பட்டிருந்தால் மட்டுமே அவரால் வாக்கு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பிரிவை கையாள முடியும். அப்படியெனில் இந்தியாவில் எத்தனை EVM இருக்கிறதோ அந்த எண்ணிக்கைக்கு இணையாக அத்தனை ஸ்பெஷல் இயந்திரங்களை வடிவமைக்க வேண்டும்.
அப்படியான ஸ்பெஷல் இயந்திரங்களை வடிவமைப்பதும், அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதும் அவ்வளவு எளிதல்ல. உலகிலேயே விரல்விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்களே அபப்டியான நுண்செயலி பொருட்களை தயாரிக்கின்றன. இந்திய வாக்கு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு கருவிகளின் அமைப்பு முறையை கண்டறிந்து, அதை ஊடுருவும் வகையிலான நுண்ணிய இயந்திரங்களை வடிவமைக்க பல லட்சம் கோடிகள் செலவாகும்.
இதோடு இது முடிந்துவிடுவதில்லை. எலக்ட்ரானிக் இயந்திரங்களை சிறியளவில் தயாரிக்க கூடிய யாராலும் சிறுசாக தயாரிக்க முடியாத ஒன்று ஆண்டெனா.
ரிலையன்ஸ் நிறுவனம் தான் வாக்கு இயந்திரங்களை ஊடுருவுகிறது என்று சொல்வோர் அது GSM 800/1800 MHz அலைவரிசைகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். ஒரு GSM ஆண்டெனாவின் குறைந்தபட்சம் அளவு 1 cm × 2cm × 0.5 cm, அதாவது நாம் பயன்படுத்தும் மொபைல்களில் உள்ள ஆண்டெனா.
அப்போ இந்தியாவில் உள்ள வாக்கு இயந்திரங்களை ஊடுருவி மோசடி செய்யவேண்டுமென்றால் எத்தனை லட்சம் ஆண்டெனாக்கள், தேர்தல் கமிஷனிடம் EVM இருக்கும் அளவுக்கு ஸ்பெஷல் இயந்திரங்கள் எல்லாம் வேண்டும்.
ஒரு வேளை தேர்தல் கமிஷன் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து களவானித்தனம் செய்தாலும் அதனால் EVM உள்ளே பொருத்தப்பட்டுள்ள ஆண்டெனாவை நம்மிடம் இருந்து றைக்க முடியாது என்பது தான் நிதர்சனம். உங்கள் வீட்டு டிவி ஆண்டெனா, டிஷ் ஆண்டெனா போன்றவற்றை கற்பனை செய்துக்கொள்ளுங்கள் இந்த சிக்கல் உங்களுக்கு புரியும்.
மொபைல்களின் ஆண்டெனாக்கள் சிறிதாக இருக்கின்றனவே என்பீர்கள், அதில் கிட்டத்தட்ட உங்கள் மொபைல் அளவிற்கே ஆண்டெனா பட்டையாக இருக்கிறது என்பதும், உலகின் பல்வேறு நிறுவனங்கள் ஆண்டெனாவின் அளவை குறைக்க இன்றளவும் முயற்சிக்கின்றன, எதுவும் வெற்றிபெறவில்லை என்பதும் தான் உண்மை.
உலகில் யாரேனும் ஒருவர் அத்தனை சிறிய ஆண்டெனாவையும், அதன் மூலம் ஊடுருவக்கூடிய நுண்ணியல் கருவிகளை அடக்கிய இயந்திரங்களையும் வடிவமைத்து அதை வாக்கு இயந்திரங்களுடன் இணைத்துவிட்டால் அவரே டெலிகாம் நிறுவனங்களின் அடுத்த கட்ட புரட்சிக்கு வித்திட்டவராகி நோபல் பரிசே வெல்லக்கூடும்.
வாக்கு இயந்திரங்கள் குறித்த தேவையற்ற பல சந்தேகங்கள் எல்லாம் தீர வேண்டுமானால் நாம் இந்திய தேர்தல் கமிஷனிடம் சொல்லி உள்ளே உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாம் வெளியே தெரியும்படியான கண்ணாடி போன்ற ஃபைபர் பேழையில் வாக்கு இயந்திரத்தை தயாரிக்க சொல்லலாம்.
உண்மையில் வாக்கு சீட்டு முறையிலான தேர்தல் தான் பூத் கைப்பற்றுதல் வாக்கு சீட்டை மாற்றுதல், என்று பலவழிகளில் மோசடிக்கு வழி வகுக்கும். கணிப்பொறியும், அச்சு இயந்திரங்களும் மலிவாகிவிட்ட இந்த நவீன விஞ்ஞான உலகத்தில் ஒரு சில மணி நேரங்களில் போலியான வாக்கு சீட்டுகளை அச்சடித்து அதை நமக்கு தேவையான வாக்கு சாவடியின் பெட்டியில் மாற்றிவிடலாம்.
வாக்கு இயந்திர முறைமையை ஏற்காத மேற்குலக நாடுகள் எல்லாம் ஒன்று சிறிய நாடாகவோ, அல்லது மக்கள் தொகையில் குறைவான அளவுள்ள நாடாகவோ, இந்தியாவை விட சிறப்பான காவல்துறை கட்டமைப்பும், இந்தியாவை போல யாருமே எளிதில் வாக்கு மையங்களை கைப்பற்றி மோசடிகள் ஏதும் நிகழ்த்திவிடாத அளவுக்கு பாதுகாப்பு தரும் வல்லமை மிக்கவை.
குறிப்பு 1:
என்ன தான் அறிவியல்பூர்வமாக EVM ஊடுருவல் சாத்தியமில்லை என்பது புரிந்தாலும் வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி நடப்பவை நம்மை குழப்பதில் ஆழ்த்துவது உண்மையே.
சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்களை குறிப்பாக கணினி, கண்டெயினர் போன்றவைகளின் நடமாட்டத்தை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி ஒரு 5 கிமீ தூரத்துக்கு முற்றிலுமாக தடை செய்வது நல்லது.
குறிப்பு 2:
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பு மறுமொழியில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக