Ravishankar Ayyakkannu :; "இந்தியா போல் தமிழ்நாட்டிலும் 22.5% SC, ST இட ஒதுக்கீடு வேண்டும்" - சரி, தோழர். தமிழ்நாட்டிலும் SC 15%, ST 7.5% என்று மாற்றி விடுவோம். "
அது எப்படி முடியும்? தமிழ்நாட்டில் அவ்வளவு ST மக்கள் இல்லையே?" - சரி, இப்போது இருக்கிற SC 18% அப்படியே விட்டு விடுவோம். ST 4.5% ஆக்கி விடுவோமா?
"இல்லை தோழர், SC மக்கள் தொகைக்கு ஏற்ப இன்னும் கூடுதலாகத் தர வேண்டும்"
- அப்படி முதலிலேயே SC பற்றி மட்டும் உரையாட வேண்டியது தானே. உங்கள் கணக்கை ஏற்ற ஏன் STஐத் துணைக்குச் சேர்த்துக் கொள்கிறீர்கள்?
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,
தமிழ்நாட்டின் SC மக்கள் தொகை 20%
அவர்களுக்குத் தரப்படும் ஒதுக்கீடு 18%.
இட ஒதுக்கீட்டின் பலன்,
18/20 = 90% SC மக்களைப் போய் சேர்கிறது. ஆனால்,
தமிழ்நாட்டில் BC+MBC மக்கள் தொகை குறைந்தபட்சம் 68% என்று வைத்தால் கூட,
50/68 = 73.5% BC+MBC மக்களைத் தான் இட ஒதுக்கீட்டின் பயன் போய் சேர்கிறது.
மற்றவர்கள் பொதுப் போட்டியில் தான் முட்டி மோத வேண்டும்.
ஆகவே, இட ஒதுக்கீடு பெறும் BC, MBC மக்கள் விழுக்காட்டை விட, SCக்குத் தமிழ்நாட்டில் ஏற்கனவே கூடுதல் இட ஒதுக்கீடு தான் தரப்பட்டு வருகிறது.
"Hello.. Hello.. சிக்னல் சரியா இல்லை..."
- நாக்பூர்ல சிக்னல் சரியா இருக்காது தோழர். தமிழ்நாட்டுக்கு வாங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக