நிச்சயமாக முடியாது...
அவர்கள் பல கட்சிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். மக்கள் நலக்கூட்டணியை ஒரு உதாரணமாக சொல்ல விரும்புகிறேன்...
எங்கள் சோழவந்தான் தொகுதியில் பி.ஆர். எனப்படும் சாதியினர் 30 ஆயிரம் வாக்குகள் இருக்கின்றன. பி.எல். எனப்படுவோரின் வாக்குகள் 30 ஆயிரம் இருக்கின்றன.
திமுக சார்பில் பி.ஆர். வேட்பாளர். ம.ந.கூ. சார்பில் பி.ஆர். வேட்பாளர். அதிமுக சார்பில் பி.எல். வேட்பாளர். ம.ந.கூ.வில் இடம்பெற்றிருந்த மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகளின் வாக்குகள் சுமாராக 20 ஆயிரம் தேறும். ஆனால், விசிக வேட்பாளர் வாங்கிய வாக்குகள் 7 ஆயிரத்தை தாண்டவில்லை.
இதுதான் கள யதார்த்தம். முதலில் விசிகவினர் தலித் வாக்குகளை ஒருங்கிணைத்துக் காட்டுங்கள். திமுகவில் இருந்த பி.எல்.வாக்குகள்கூட கிருஷ்ணசாமியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு திமுகவுக்கு விழவில்லை என்பதை நினைவூட்டுகிறேன்...
திருமாவை சாதித்தலைவராக தூக்கிப்பிடிக்கும் வரை தலித் மக்களை விசிகவினர் வென்றெடுக்க முடியாது...
அச்சுறுத்துவது வேறு... மரியாதையை பெறுவது வேறு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக