ஜி.ராமச்சந்திரன் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை..--விகடன்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயிலில் இருந்து போது அவரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள சொன்னவர் தலைவர் கலைஞர் என்று சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். எங்களையா பார்ப்பனர்களுக்கு எதிரி என்று சொல்கிறீர்கள். சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்தியச் சிறைக் குக் கைதியாகக் கொண்டுவரப்பட்டு என் முன் நிற்க வைக்கப்பட்டார் ஜெயேந்திரர் கண்கள் இரண்டும் உக்கிரத்தில் சிவந்தி ருந்தன. கோபம், வருத்தம், இயலாமை, அவமானம் என உணர்ச்சிகளின் பிழம் பாக தண்டத்தைக் கையிலேந்தி நின்றா ர். கண்களில் கண்ணீர் முட்டியது. அழு தால் அசிங்கமாகி விடும் என்று அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார். இந்து மதத்தின் ஒப்பற்ற தலைவர் ஜெக த்குரு, இப்போது ஒரு சிறைக்கைதி. நான் நின்றுகொண்டு அவரை அமரச் சொன்னேன். அவர் அமரவேயில்லை. ஜனாதிபதியின் இருக்கையில் அமர்ந்த வர், என் முன்னே நின்றுகொண்டே பேசினார்.
இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் அவரைக் கொட்டடியில் அடைக்க வேண் டும். திடீரென அவர் சிறைக்கு கொண்டு வரப்பட்டதால், அவருக்கு எந்தச் சிறப்பு முன்னேற்பாடும் செய்யவில்லை. அரசிய ல் கைதிகள் அதிக எண்ணிக்கையில் வரும்போது, அவர்களை அடைப்பதற் காக 20 ஏக்கர் பரப்பளவுள்ள ‘குளோஸ்டு ப்ரிஸன்’ (Closed Prison) தொகுதி இருந்த து. அது, நீண்ட நாட்களாக யாரும் அடைக் கப்படாமல் புதர் மண்டிக் கிடந்தது.
அந்தத் தொகுதியையே அவருக்கு ஒதுக் க முடிவு செய்தேன். ஆயிரம் கைதிகளை உடனே அந்த வளாகத்துக்கு அனுப்பி, இரண்டே மணி நேரத்தில் சுத்தமாக்கி னேன். தண்ணீர் மற்றும் மின்சார வசதிக ள் செய்யப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக் டர் அந்தஸ்திலுள்ள இரண்டு அதிகாரிக ள் தலைமையில் 40 காவலர்கள்கொண்ட ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டு, இரவு பக லாக பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட் டு அந்தத் தொகுதிக்குப் போகச்சொன்ன போது, அவர் என்னிடம் சொன்ன வார்த் தை, என்னை அதிரவைத்தது... ‘‘நான் இனி உயிரோடு இருக்கப் போவதில் லை. இவ்வளவு பெரிய அவமானத்தைச் சகித்துக்கொண்டு உயிர் வாழ எனக்கு விருப்பமில்லை. உண்ணா நோன்பு இருந்து உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்!’’ என்றார்.
என் மனதில் தோன்றியதை நான் பேசினேன்...
‘‘நீங்கள் முற்றும் துறந்த துறவிதானே... உங்கள் பார்வையில், உள்ளே இருந்தால் என்ன, வெளியுலகில் இருந்தாலென்ன? இரண்டும் ஒன்றுதானே. கடவுள் ஒரு சில நாள்கள் உங்களுக்கு பாதுகாப்புகொடுக் கச் சொல்கிறார். சிறையைவிட பாதுகா ப்பான இடம் வேறு ஏதும் இல்லையே!’’ என்றேன். அவர் சற்றே நிதானித்து விட் டுப் பேசினார்...
‘‘என்னதான் எல்லாவற்றையும் துறந்தா லும் எனக்கென்று சில கடமைகள் இருக் கின்றன. லோக க்ஷேமத்துக்காக பூஜை செய்யாமல் சாப்பிடக் கூடாது. நான் நினைத்தவாறு சிறைக்குள் பூஜை செய் ய முடியுமா?’’ என்று கேட்டார். ‘‘உங்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை நான் செய்கி றேன்’’ என்றேன். ‘‘பூஜை செய்ய தனி இடம் வேண்டும்’’ என்றார். ‘‘கொடுக்கி றேன்’’ என்றேன்.
‘‘சிறையில் கொடுக்கப்படும் உணவை என்னால் சாப்பிட முடியாது; என் ஆசாரப் படி என்னுடைய உணவு ஒரு பிராமணரா ல்தான் சமைக்கப்பட வேண்டும், கிணற் று நீர்தான் அருந்துவேன்’’ என்றார். ‘‘அனைத்துக்கும் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றேன். அவர் எதைக் கேட்டாலும், செய்து கொடுக்கும் மனநிலையில்தான் நானிருந்தேன்.
தண்டனைக் கைதியாக இருந்த ஒரு பிராமணக் கைதியால் அவருக்கு உணவு சமைக்கப்பட்டு, எனது பரிசோதனைக் குப் பிறகு அவருக்கு வழங்கப்பட்டது. காலையில் அரை லிட்டர் ராகிக்கஞ்சி, மதியம் 500 கிராம் தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம். இரவு மூன்று பூரி, 200 மி.லி பால்... அவருடைய ஒரு நாள் மொத் த உணவும் இவ்வளவுதான்! இதைச் செய்து கொடுக்க முடியாதா ஒரு சிறைக் கண்காணிப்பாளரால்?
எல்லாவற்றையும்விட அவருடைய பாது காப்புக்கு நான் பெரிதும் கவனம் செலுத் தினேன். அதற்குக் காரணம் உண்டு. அவரைச் சிறைக்கு அனுப்பிய பிறகு, அவரைப் பாதுகாப்பது குறித்து எந்த ஓர் அறிவுறுத்தலும் அரசுத் தரப்பிலிருந்து எனக்கு வரவில்லை. ஆனால், வெளியி லிருந்து பலரும் அவரைப் பத்திரமாகப் பாதுகாக்கச்சொல்லி என்னிடம் தொலை பேசியில் பேசினார்கள்.
அதில் நான் எதிர்பாராத ஒருவரிடமிரு ந்து அழைப்பு வந்தது. ஜெயேந்திரரின் பாதுகாப்புக்கு நான் அவ்வளவு மெனக் கெட்டதற்கு அவர் பேசியதும் மிக முக்கி யக் காரணம்.ஜெயேந்திரரை பத்திரமா கப் பார்த்துக் கொள்ளச் சொல்லி எனக் குத் தொலைபேசியில் அன்புக் கட்டளை போட்டவர், கலைஞர்.
அவர்தான் என்னிடம் பேசி, “அவரை பத் திரமாகப் பார்த்துக்கொள். எங்களுக்குள் கொள்கை முரண்கள் இருந்தாலும், அவர் ஏராளமான மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பவர். அதனால் அவரைக் காக் க வேண்டியது அவசியம். அது மட்டுமன் றி அவருக்கு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்ப ட்டாலும், அது கொள்கைக்கு முரணான வர்கள் செய்த காரியமாகக் கருதப்பட வும் வாய்ப்புண்டு. அதில் உன் பெயரும் பழுதாகிவிடும்!’’ என்று எச்சரித்தார்.
ஓர் இந்துமதத் துறவியை, ஜனாதிபதி இருக்கையில் அமரவைத்து அழகு பார் க்கிறார் ஓர் இஸ்லாமியர். அவரை பத்தி ரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி வேண்டுகோள்விடுக்கிறார் பகுத்தறிவு பேசும் அரசியல் தலைவர். ஆனால், இந் து மதத்தில் தீவிரமான பற்றும் பக்தியும் கொண்ட ஒருவரின் ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். `வேற்று மையில் ஒற்றுமைதான் நம் தேசமோ...’ என்று தோன்றியது எனக்கு.
ஜி.ராமச்சந்திரன் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி.,
சிறைத்துறை.......--விகடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக