உடலை பேணுவதில் ஸ்டாலினை எல்லோரும் பின்பற்றவேண்டும். எவ்வளவு கவனமாக அவர் இருக்கிறார் என்பதை சாதாரண விடயமாக எடுத்து கொள்ள முடியாது . அவரது வயதை ஒத்த பல அரசியல்வாதிகள் தங்கள் உடலை பேணும் விடயத்தில் படு மோசமாக இருக்கிறார்கள் . நாட்டை வழிநடத்த வேண்டிய ஒருவர் தனது உடலையே சரியாக பேண முடியாமல் உள்ளார் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்பட வேண்டிய விடயம்தான். சிலருக்கு இயற்கையிலேயே உடலில் பல சிக்கல்கள் இருக்கலாம் . ஆனால் பலரின் குறைபாடுகள் அவர்களின் தவறான வாழ்க்கை முறையினால் ஏற்பட்டவையே. ஏராளமான உதாரணங்களை கூற முடியும். அம்மையார் ஜெயலலிதா கப்டன் விஜயகாந்த் போன்றோரின் உடல் உபாதைகளுக்கு அவர்களின் தவறான வாழ்வியலே காரணமாகும் . இது அவர்களை குறைகூறுவதற்காக கூறப்படுவதல்ல . மாறாக இது ஒரு ஆழமான படிப்பினையாக எடுத்து கொள்ளவேண்டும் என்ற நல்நோக்கத்தில் கூறுவதாகும்
தனது உடலையும் மனதையும் ஒழுங்காக பேணுபவர் நிச்சயமாக பொறுப்புணர்வு மிகுந்தவர்தான் . திறமை எல்லாமே அப்புறம்தான் கவனத்திற்கு எடுத்து கொள்ளவேண்டும் .முதலில் பொறுப்புணர்வு வேண்டும் . அது ஸ்டாலினிடம் இருக்கிறது . அதன் காரணமாகவே அவர் கலைஞரின் அரசியல் வாரிசாகி இருக்கிறார் என்று கருதுகிறேன் . வெறுமனே அவர் மகனாக இருந்ததால் மட்டும் இந்த உயரத்தை அவர் எட்டவில்லை .. இந்த உயரத்தை அவர் உழைத்து பெற்றிருக்கிறார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக