அன்பின் Evidence கதிர், 1971. SC/ST மக்கள்
இட ஒதுக்கீட்டை 16% ல் இருந்து 18% ஆக உயர்த்தியவர் கலைஞர்.1989. BC இட ஒதுக்கீடை இரண்டாகப் பிரித்து MBC - 20%, BC - 30% என்று கொடுத்தவர் கலைஞர்.
1989. SC/ST என்று ஒன்றாக இருந்த 18%ஐத் தனியாகப் பிரித்து ST - 1%, SC -
18% என்று தனித்தனியாகத் தந்தவர் கலைஞர்.SC தொகுப்பில் இருந்து ST வெளியேறிய போதும் SC இட ஒதுக்கீட்டைக் குறைக்காமல் அப்படியே 18% தந்தவர் கலைஞர்.
இதன் மூலம் SC மக்களுக்குக் கூடுதல் 1% இடங்கள் கிடைத்தது என்றும் கொள்ளலாம்.
ஆக, SC இட ஒதுக்கீட்டை 3% அளவுக்கு உயர்த்தித் தந்த ஒரே தலைவர் கலைஞர் மட்டுமே. 2009. SC மக்களில் கடைநிலையில் உள்ள SCA மக்களுக்கு 3% உள் ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
MGRம் சரி அதிமுகவும் சரி, SC, ST மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை.
ஆனால், எது கலைஞரின் சாதனையோ அதை MGR செய்தார் என்கிறீர்கள்.
யார் அவர்களுக்கு நன்மை செய்தாரோ அவரை மறைத்து, ஒன்றுமே செய்யாத ஒருவரை உயர்த்திப் பிடிக்கிறீர்கள்.
ஒரு முறை சொன்னால் தெரியாமல் சொல்கிறீர்கள் என்று நினைக்கலாம்.
ஆனால், பல முறை சுட்டிக் காட்டிய பிறகும் மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறீர்கள்.
பெயரிலேயே Evidence உள்ளவர் ஆதாரம் அற்ற பொய்களைப் பரப்பலாமா?
இப்படி தெரிந்தே பொய் பரப்பும் போது,
ஒரு வேளை, கலைஞர் SCA மக்களுக்கு 3% உள் ஒதுக்கீடு தந்தது பிடிக்காமல் தான் இப்படி வரலாற்றைத் திரிக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.
கால வெள்ளத்தில் உங்களைப் போன்றோர் வருவார்கள் போவார்கள்.
ஆனால், ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும் என்று நீங்கள் எடுத்துக் கொண்டு செய்யும் பணி உன்னதமானது.
உங்களைச் சுற்றி 4 பேர் இருந்தாலும் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பெரிது.
இப்படி தெரிந்தே பொய் சொல்வது,
நீங்கள் கொண்ட கொள்கைக்கும் உங்களை நம்பி உள்ளவர்களுக்கும் செய்யும் பச்சைத் துரோகம்.
போராளிகள் பொய் சொல்லக் கூடாது!
Ravishankar Ayyakkannu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக