இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை
ஊரடங்கு தொடரந்தாலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த
தளர்வுகள் குறித்து தற்போது பார்ப்பபோம்.
தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை ரத்து
செய்யப்படுகிறது. ஆனால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம்
வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் தேவை. அதேபோல் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு,
உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கு செல்லவும் இ-பாஸ் அவசியம்.
தமிழகத்தில் ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், கிளப்களை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் காலை
6 மணி முதல் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். மால்கள்
திறக்கலாம்,
ஆனால் மால்களில் உள்ள திரையரங்குகளும் மற்ற திரையரங்குகளும்
திறக்க அனுமதி இல்லை. >செப் 7ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ
ரயில் போக்குவரத்து தொடங்குகிறது. செப்டம்பர் 1 முதல் சென்னையிலும் மற்ற
மாவட்டங்களிலும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஓடும்
ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.<>மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல்
கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை தொடரும். வழிபாட்டு தலங்களில் தரிசனம்
செய்ய மட்டுமே அனுமதி; நிகழ்ச்சிகள் நடத்த தடை நீட்டிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக