BBC : இந்தியா-சீனா-எல்லை-பதற்றம்-"மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி, லடாக்கில் சுமார் 1,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தற்போது சீன கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாக இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன என்று தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் - மே மாதம் முதல் இரு நாட்டு எல்லையாக உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஏ.சி) அருகே சீனா படைகளை குவித்து வருகிறது.டெப்சாங் சமவெளிகளில் இருந்து சூஷூல் பகுதி வரை சீனப் படைகள் முறையாக குவிக்கப்பட்டு வருவதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.டெப்சாங் சமவெளிகளில் பேட்ரோலிங் பாய்ண்ட் 10 முதல் பேட்ரோலிங் பாய்ண்ட் 13 வரையிலான தூரத்தில் சுமார் 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா கட்டுப்படுத்துவதாக இந்தியா கருதுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.கல்வான் பள்ளத்தாக்கில் 20 சதுர கிலோ மீட்டர், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 12 சதுர கிலோ மீட்டர், பாங்கோங் த்சோ ஏரி அருகே 65 சதுர கிலோமீட்டர், சூஷூல் அருகே 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவு சீன ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதாக இந்தியா கருதுகிறது என்று அந்த அதிகாரி தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக