Thangaraj Gandhi : · அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தலித் மக்களை பிரிக்கிறது. இது திராவிட அரசியலின் பிரித்தாலும் சூழ்ச்சி! என்போர்களே.. Fact check பண்ணுவோமா?
1) அடிப்படையில் பள்ளர் தெரு, சக்கிலியர் தெரு பறையர் தெரு என நாம் பிரிந்து தான் உள்ளோம். மூவரும் கண்ணெதிரே பிரிந்து வாழ்வதையும் பெண் கொடுத்து பெண் எடுப்பதும் இல்லை என பல சிக்கலை உடைய நாம் தலித் ஒன்றாய் இருப்பதாக கற்பனையில் இருக்காதீங்க.. இயல்பு அம்பேத்கர் Vs பெரியார் ஏற்றுக்கொள்வதிலேயே நாம் சிக்கலில் தான் உள்ளோம்.
2) இடஒதுக்கீடு சாரத்து என்ன முன் வைக்கிறது என்றால், பட்டியலில் ஒரு பிரிவினர் வலுவாக வளர்ந்து கொண்டே சொல்வதால் கீழே உள்ளவர்கள் கீழேயே நிரந்தரமாக தங்கி விடும் நிலை உருவாகி உள்ளது. ஆகவே இட ஒதுக்கீடு சரியாக பகிர்ந்தளிக்கப் படுகிறதா? அவ்வபோது ஆய்வு நடத்த வேண்டியது அரசின் கடமை. அப்படி நடத்திய ஆய்வில் வெளிவந்த கொடுமையான பிரச்சனைகளில் ஒரு சமூகம் சிக்கி சீரழிகிறது என தரப்பட்ட அறிக்கையில்.. மாநிலம் வாரியாக பார்த்த போது தமிழ்நாட்டில் அருந்ததியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர் என அந்த குழு தனது அறிக்கையை வழங்கிவிட்டனர்.
18 சதவீத இடஒதுக்கீடும் என்னமோ அவர்கள் அப்பன் வீட்டு சொத்து போல.. தங்களால் ஆன எதிர்ப்பை அம்பேத்கர் படத்தை காட்டி வெறுப்பை உமிழ்ந்து புலங்காகீதம் அடைகின்றனர் சிலர்.
இங்கு அருந்ததியர் உள்ஒதுக்கீடு ஒதுக்காமல் போயிருந்தால்...? விடயம் வேற மாதிரி திரும்பியிருந்தா? பறையர்களைத் தான் முதலில் பட்டியலிலிருந்து அரசே வெளியேற்றியிருக்கும்..
வெளியேற்ற வேண்டும் என்றுதான் அனைத்து மாநிலமும் ஒப்புக் கொண்ட சரத்து உள்ளது.
உஷா மெஹ்ரா கமிஷன் என்ன அறிக்கை தந்தது என போய் படியுங்கள். ஒருவேளை
பறையருக்கு அடுத்த நம்மை அந்த கமிஷன் வெளியேற்றி கேவலப்படுவதை விட நாமே
பட்டியலில் இருந்து வீரமாக வெளியேறுவோம் என்பது கிருஸ்னசாமி கனிப்பு...
ஆனால் தவறானது. வெறும் உணர்ச்சி பூர்வமானது. அறிவுபூர்வமானது அல்ல.
இந்த உள்இட ஒதுக்கீடு பறையர்கள் இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதால்தான் திருமாவே, வரவேற்கிறார். என்னமோ தானே பெற்று தந்தது போல.. அவர் வரவேற்பதற்கான காரணத்தை ஓபனாக பேசினால், அரசியல் செய்ய அவரால் முடியாது. ஆகவே பலத்த பறையர்கள் முன் அவர் பலத்த மௌனம்.
அவர் ஏன் ஆதரிக்கிறார். அவரை எதிர்த்து பேசுங்க என பறையர் சமுதாய முன்னேறியவர்களை உசுப்பினாலும் வரமாட்டார்கள். ஏனென்றால் விடயம் அவங்களுக்கும் தெரியும். ஆக கூட்டு மௌனம்.
அரசியல் சாசனம் என்ன சொல்லியிருக்குனு தெரியாமல் மூன்றாம்தரமா நின்று கம்பு சுத்தாதீங்க.. ஏன்னா கிருஷ்ணசாமி அவர்களே தன் மகனுக்கு என்ன காரணம் என சொல்லாமல் மறைத்திருக்கிறார். டுவிட்டரில் அவர் மகன் சியாம் கதறல் பார்த்தேன்.
இருப்பை தக்க வைக்கும் மனிதப்
பிறவியில் என்னென்ன பாடுபடுகிறார்கள். மேலே உள்ள தலைவர்கள். ஆனால் எங்கள்
அய்யா அதியமான் எந்த இடத்திலும் எங்கள் சமூகத்தை சமூகநீதி அடிப்படையில்
எதிர் வரும் அவதூறுகளை யார் சொன்னாலும் எதிர்ப்பார்..
சமரசமற்ற தலைவர். ஆனால் அவரை தலைவர்கள் பட்டியலில் கூட நீங்கள் சேர்ப்பதில்லை. அது சிலரது மனநோய். என நாங்கள் கடந்துவிடுகிறோம்.
உண்மையில் அருந்ததியர் உள்ஒதுக்கீடுதான் பட்டியல் சமூக ஒற்றுமைக்கு அடித்தளத்தை வலுவாக கட்டியெழுப்பி உள்ளது.
அருந்ததியர்கள் 3% வாங்கி ஒதுங்குவதால் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது இதர தலித்துகளின் இட ஒதுக்கீடு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
3)
இல்லை. 76 சாதிகளில் அருந்ததியருக்கு மட்டும் இட ஒதுக்கீடா? மற்ற 75 பேர் நக்கிட்டு போவதா? என இப்படியும் ஒரு கோஷ்டி கிளம்புது...
உண்மையிலேயே தமிழ்நாடு மூன்று இரண்டு பக்கம் கடலாலும் ஒரு பக்கம்
நிலத்தாலும் சூழ்ந்த முக்கோண வடிவம் உடையது. அதாவது.. ஒரு பக்கம் பள்ளர்
மேற்கு பக்கம் சக்கிலியர்.. நிலப்பரப்பு பகுதியான வட தமிழகத்தில் பறையர்கள்
என குழுமியிருந்த இருக்கிறோம்.
நமக்குள் பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழக்கம் கிடையாது.
ஆனால் மேற்கில் நிறைந்த மாதாரி செம்மான் பகடை ஜாம்பலு சக்கிலியர்
அருந்ததியர் உள்ளிட்ட பல துணை சாதிகள் ஓர்மைக்காக தங்களை ஆரம்பத்தில்
சக்கிலியர் என்றும் பின்னாளில் அருந்ததியர் என்றும் கூடினர். பெண் கொடுத்து
பெண் எடுக்க தமிழகம் முழுதும் நிறைந்தனர்.
இப்படித்தான் பறையனும் சாம்பவர் உள்ளிட்ட பல சாதிகளும் இணைந்து பறையர் அல்லது ஆதிதிராவிடர் என்ற ஓர்மையில் இணைந்தனர். அப்படியே பள்ளுரும் இப்போது தேவேந்திரர்களாக..
ஆக 76 சாதிகளும் இப்படி திசைக்கேற்றார் போல North East West South எனும் Newsக்கு ஏற்றார் போல் வந்த தகவலின் அடிப்படையில் இணைபவர் இணைந்தும்.. பிரிந்தவர் பிரிந்தும் வாழ்கிறோம். எப்படி பிரிந்தாலும் இந்த 76 சாதிகளை சக்கிலியர் பள்ளர் பறையர் என்ற வட்டத்திற்குள் சுருக்கி இனங்கான முடியும்.
ஆனால் கிருஷ்ணசாமி மீது மாதிரி என்ற பட்டமும் சந்தையூர் பிரச்சனையில் பா.ரஞ்சித் சக்கிலியரும் ஆகியது எப்படி?
இங்கு இனத்தூய்மைவாதம் எப்பவோ நமத்து போன ஐடியா.
கொஞ்சம் மேலே என்ன பறக்குதுனு பாருங்க. எதையும் அதன் ஆணிவேரிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் நாளைய பௌத்த மீட்பு,
சக்கிலியர் பள்ளர் பறையர் ஒற்றுமையில் தான் உள்ளது.
தங்கராஜ் காந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக