சனி, 5 செப்டம்பர், 2020

கலைஞரைப் பார்ப்போமா என்று காத்துக்கொண்டிருந்தவர் விஜயகாந்த்

 Rebel Ravi : ; ஜெமினி சினிமா ஆசிரியராக நான் இருந்த போது விஜயகாந்த்
சூப்பர்ஸ்டார் ஆனார் என்று அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டேன்...
அதற்காக என் மீது கொலை முயற்சி எல்லாம் நடந்தது..

அதற்கெல்லாம் அஞ்சுபவனா நான்?< உயிரோடிருந்தவரை..ரவிய மாதிரி தைரியசாலி பத்திரிகைக்காரன் யாருமில்லைனு சொல்லிக் கொண்டிருந்தவர் விஜய்காந்தின் நண்பர் இப்ராஹிம் இராவுத்தர்.

அந்தக் காலத்தில்..விஜயகாந்த்.. ஒதுக்கப்பட்டவராக இருந்த போது அவரை ஆதரித்த ஒரு சில பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன்..மற்றவர் தேவி மணி..

அப்போது விஜயகாந்த் என்னிடம் கலைஞரைப் பற்றி அதிகம் பேசுவார்..
அவரைச் சந்திக்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்படுவார்..
என்னிடமே பல முறை கூறியுள்ளார் தான் திமுக என்று...
ஆனால் ஓப்பனா பிரச்சாரம் பண்ண மாட்டேன் என ஒதுங்கிக்கொள்வார்...

கலைஞரைப் பார்ப்போமா என்று காத்துக்கொண்டிருந்தவரின் காலில் கலைஞர் விழுவதாய்க் கார்ட்டூன் போடுபவன் எவ்வளவு கீழ்த்தரமான நாயாக இருப்பான்...

கலைஞர் இந்திரா காலில் விழாதவர்... அதனால் 10 ஆண்டு ஆட்சியை இழந்தவர்...எம்ஜிஆரோடு காம்ப்ரமைஸ் செய்திருந்தால் 50 ஆண்டு தொடர்ந்து ஆண்டிருப்பார்...அவரைப் போய் இப்படி ஒருவன் வரைந்தால்.. அவன்.....
வேணாம் விடுங்க...

ரெபெல்ரவி
04/09/2020

கருத்துகள் இல்லை: