லைக் வைத்து அரசியல் பேசுவது முட்டாள் தனம் .விரும்படுவது என்பதை அரசியலோடு இணைத்து பார்க்க முடியாது ..திருவாசகம், திருவெம்பாவை, திருப்பதிகம்னு பக்தி பெருக்கெடுத்த இந்த மண்ல தான் சித்தர்கள் கொண்டாடப்பட்டனர் ..கடவுள் மறுப்பையும் பேசிய திராவிட இயக்கம் 100 ஆண்டுகளுக்கு மேலா செழித்து வளருது..
கடவுளை விரும்பியவர்கள் எப்படி திராவிட இயக்கைத்தை ஏற்றனர் ...மதமும் அரசியலும் வேறு என்று தெளிவும் காரணம் ..ஆக லைக் என்பது அந்த நிகழ்வுகானதே அன்றி அதுவே இறுதி விருப்பம் இல்லை ..
இன்று இந்த லைக் அரசியல் பேசப்படுவதன் பின் ஏதேனும் காரணம் உண்டா ?
இருக்கலாம்
பிரதமர் " பொறுப்பு" நபர் மருத்துவமனையில் உள்ளார் . அவர் வந்து அரசு செயல்பாட்டை பொறுப்பெடுக்கும் வரை " ஆக்டிங் " பிரதமர் அந்த பொறுப்பை கவனித்தாகனும்..சும்மா இருந்தா பேப்பர்காரன் கேள்வி கேட்ப்பான் .
அவனுககு வாத்து ,நாய், லைக்ன்னு தீனி போட்டுட்டா
பொருளாதாரம் தொடர்ந்து எட்டு காலாண்டு மேலா சரிவதை பற்றி கேள்வி கேட்க
மாட்டான் .கோவிட் இறப்பு எத்தனைன்னு கேட்க மாட்டான்..
வேலை இழப்பு, அதனால் அதிகரித்துள்ள திருட்டு,கொலை , பெண்கள் மீதான வன்முறை பற்றி கேட்க மாட்டான்.
நாளைக்கே அண்ணாமலையா உதயனித்யான்னு ஒரு போல் வச்சு என்னவோ திமுகன்னா அது உதயனிதி தான்ற மாதிரி கிரியேட் செய்து , அந்த poll ல உதயநிதி அண்ணாமலை விட கம்மி லைக்ன்னு காட்டி என்னடா இவன டுபாக்கூர் அவன் விட கீழ இருக்கன்னு கேப்ஷன் போட்டு சவுக்கு அந்த போல் ரிசல்ட்ட போடுவார் ..
அதாவது உதயனிதி ய கம்மியா காட்ட ஒரு ஆள உருவாக்கனும்...அதுக்கு அண்ணாமலை ய ஒரு காமடி பீஸா உருவாக்கறது தான் சவுக்கு அஜண்டா..
ஏன் அவருக்கு உதயனிதி
பார்த்து பயம் ? ..அவருக்கு இல்லை அவருக்கு சம்பளம் தருபவர்க்கு
பயம் .. உதயனிதிய விட பிரில்லியண்டான ராஜா அண்ணன் பார்த்து வராத
பயம் ஏன் உதயனிதி பார்த்து வருது ? .
உதயனிதி விட சீனியர் பார்த்து வராத பயம் ஏன் உதயனிதி பார்த்து வருது ? .
உதய நிதி விட மக்கள் அபிமானம் உள்ள கனிய பார்த்து வராத பயம் ஏன் உதய நிதி பார்த்து வருது ?
சிம்பிள் , உதய நிதி கட்சிய கட்டி காப்பாத்த கூடியவரா அவர்களுக்கு தோனி இருக்கலாம் .
ஸ்டாலினுக்கு பின் திமுக வ உடைச்சு அழிச்சுடலாம் என்ற ஆசையில் மண் விழுந்ததா நினைத்து இருக்கலாம்..
அதான் அவர்கள் டார்கெட் உதயனிதியா இருக்கு....இப்பவும் இந்த போஸ்ட்காக என்னை பேக் ஐடி மற்றும் உதய நிதி சொம்புன்னு அவர் பக்கம் தான் நிறுத்துவார்.
பி ஜே பிய கேள்வி கேட்டா அவர் உதயனிதி சொம்பா இருக்கனும் என்பதிலயே சவுக்கு தன்னை பி ஜே பி எதிரி இல்லைன்னு நிறுவுவதை மறந்துடறார் அல்லது கவனிக்கல பாவம் ..
இப்பவும் என் கேள்வி அப்படியே தான் இருக்கு....இந்த மாதிரி டிரண்ட்
அரசியல் பேசுவோர் மக்கள் நலனுகாக பேசுகிறார்களா , இல்லை வாங்கற
காசுக்கு பேசுகிறார்களா ? ..
பதில் சொல்ல திராணி இருக்கா ? ..
இந்த பதிவுக்கும் அவர்களால் சொல்ல முடிந்த பதில் பேக் ஐடி , உதய நிதி சொம்பு ( திமுக சொம்புல இருந்து பிரமோஷன் ) , அவ்வளவு தான்.
நீங்க எது சொன்னாலும் உங்க புள்ள குட்டி தலைல சத்தியம் பண்ணி ஆமான்னு சொல்றேன்....
பேக் ஐடியா , ஆமா பேக்கு .
சங்கியா , ஆமா சங்கி,
உதயனிதி சொம்பா, ஆமா உதயனிதி சொம்பு,.
எங்க இதே மாதிரி பட்டுன்னு என் கேள்விக்கு பதில் சொல்ங்க .
#தேவி..
BBC :நரேந்திர மோதியின் 'மன் கி பாத்' உரையை யூடியூபில் டிஸ்லைக் செய்யும் நெட்டிசன்கள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மன் கி பாத் உரையை யூடியூபில் ஏராளமான பயனர்கள் டிஸ்லைக் செய்து வருகின்றனர்.
#StudentsDislikePMModi என்ற ஹேஷ்டேகும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோதி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் மோதி முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருப்பார்.
தலையாட்டி பொம்மைகள்,ராஜபாளையம் நாய்கள்
இந்த நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சியின் 68வது நிகழ்வில் நேற்று மோதி உரை நிகழ்த்தினார்.
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் மோதி தனது உரையில் பேசினார்.
அதேபோல் ராஜபாளையம் நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"நாம் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்," என்று தனது உரையில் குறிப்பிட்டார்
டிஸ்லைக் செய்த நெட்டிசன்ஸ்
நரேந்திர மோதியின் உரையை பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்தது.
அந்தப் பக்கத்தை சுமார் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.
ஏறத்தாழ 10 லட்சம் பேரால் அந்த காணொளி பார்க்கப்பட்டிருக்கிறது.
31 நிமிடங்கள் ஓடும் இந்த காணொளியை திங்கள்கிழமை காலை வரை 28,000 பேர் லைக் செய்துள்ளனர், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் டிஸ்லைக் செய்துள்ளனர்.
ஏறத்தாழ 52 ஆயிரம் கமெண்டுகள் பதிவாகி உள்ளன.
இந்த நிலையில் ட்விட்டரிலும் மோதிக்கு எதிரான ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக