Karthikeyan Fastura : ஒரு கிரிக்கெட் டீமுக்கு பிட்னெஸ் கோச், பவுலிங் கோச், பீல்டிங் கோச், பேட்டிங் கோச், மெண்டல் பிட்னெஸ் கோச் என்று நிறைய இருப்பார்கள். இவர்கள் அத்தனை பேரும் இந்தியர்களாத் தான் இருக்கவேண்டும் என்று தேட முடியாது.
ஜாண்டி ரோட்ஸ் நமக்கு பீல்டிங் கோச்சாக இருந்த போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடி வென்றதும் உண்டு. அப்போது அவர் மீது யாரும் எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை தானே
அதே போலத் தான் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் திமுகவிற்கு உதவ களம் இறக்கப்பட்டதும் . இன்று தேர்தல் அரசியல் மிகவும் நுணுக்கமாக இறங்கி அடிக்க வேண்டிய சூழலில் உலக அரசியல் இருக்கிறது. திமுக இப்போதாவது புரிந்துகொண்டு வேலை செய்வது மகிழ்ச்சியே. மூன்று வருடங்களுக்கு முன்பே தமிழக அரசியல் கட்சிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து நுணுக்கமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை எழுதியிருந்தேன். IPAC நிறுவனம் அதையும் தாண்டி நுணுக்கமாக செயல்படும் ஒரு Political Strategic Management நிறுவனமாக செயல்பட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனமாக இருக்கும். இங்கு பிரசாந்த் கிஷோர் ஒரு பார்ப்பனர் என்றெல்லாம் பார்க்கவேண்டியதில்லை. அவர் ஒரு தொழில் வல்லுனராக செயல்படுவாரே ஒழிய பார்ப்பனராக செயல்பட்டு தொழிலை கெடுத்துக்கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். இருந்தாலும் திமுக அவர் மீது ஒரு கண் வைத்துக்கொள்வதில் தவறில்லை.
பகை கூட்டத்திடம் இருந்து விலைக்கு வாங்கலாம் விலை போகத்தான் கூடாது.வருங்காலத்தில் எங்களை போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் இந்த துறையில் கால் பதிக்கலாம் .
அப்போது திராவிடர்களாக இருந்து திராவிட கட்சிகளுக்கு உதவ தயார்
. இப்போது திமுக ரிஸ்க் எடுக்காமல் ஜாம்பவான்களிடம் செல்வது தான் நல்லது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக