புதன், 5 பிப்ரவரி, 2020

6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!!

1_Kinane  newlanka.lk ›  6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!! 6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!! 1 Kinane26 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!!newslanka :வேல்ஸ்,போர்த்மடோக் – குய்னெத்தைச் சேர்ந்த (Michael Kinane) மைக்கல் கினேன் (வயது 41) என்ற நபர் எஃப்.பி.ஐ மற்றும் பிரிட்டிஷ் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட ஒப்பரேஷன் புளூ கோஸ்ரலைத் நடவடிக்கையைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டார். லண்டனை தளமாகக் கொண்ட மருந்து முதலீட்டு நிறுவனமான அவிலியனின் (Avillion) மின்னஞ்சலுக்குள் ஊடுருவி பணம் செலுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். கனாபன் (Caernarfon) கிரவுன் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் மைக்கல் கினேனுக்கு ஏழு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கினேன் பணமோசடிக்குச் சதி செய்ததாகவும், மூன்று முறை மோசடி செய்ததாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீதிபதி நிக்கோலா ஜோன்ஸ் (Nicola Jones) தனது தீர்ப்பின்போது கூறுகையில்; குற்றவாளி தனது பேராசை மூலமே இந்தத் தவறைச் செய்துள்ளார் என்றும் இழைத்த தவறுக்கு மைக்கல் கினேன் உண்மையான கழிவிரக்கத்தைக் காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இலக்கு வைக்கப்பட்ட நிறுவனம் ஒரு அமெரிக்க முதலீட்டாளருடன் சேர்ந்து இயங்கும்போது அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு, சட்டரீதியான வேலைக்குப் பணம் கோரி, புதிய கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அவற்றில் ஒன்று மைக்கல் கினேனின் வங்கிக் கணக்காகும்.
0_Kinane1 6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!! 6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!! 0 Kinane1இதன் காரணமாக 2018 நொவெம்பர் 2 ஆம் திகதி குறித்த நிறுவனம் தனது நற்வெஸ்ற் (NatWest) வங்கிக் கணக்கில் 7.8 மில்லியன் டொலரை வைப்புச் செய்தது.
இலங்கையில் பிறந்து பிரித்தானியக் குடியுரிமை பெற்ற மைக்கல் கினேனே அந்த இரண்டு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளையும் உருவாக்கியுள்ளார்.
2018 நொவெம்பர் 2 மற்றும் 5 ஆம் திகதிகளுக்கிடையில் இடையில் கினேனின் வங்கிக் கணக்குகளுக்கு வரும் நிதி அவரது கூட்டாளிகளிடையே போலந்து, ஜேர்மனி, ஹொங் ஹொங் கொங், சீனா மற்றும் மலேசியாவில் உள்ள கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: