வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

குழந்தையை காப்பாற்ற 360 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த கர்நாடக ஆம்புலன்ஸ்

குழந்தையை காப்பாற்ற 360 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மாலைமலர்:  குழந்தையின் உயிரை காக்க 360 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 20 நிமிடத்தில் டிரைவர் கடந்து சென்றதால், அக்குழந்தைக்கு டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த பிறந்து 40 நாட்களே ஆன சைப்புல் அஸ்மான் என்ற குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தைக்கு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் ஆபரே‌ஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக அந்த குழந்தையை ஏற்றிக் கொண்டு மங்களூருவில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்புலன்ஸ் புறப்பட்டது. அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற போலீசாரும் ஒத்துழைத்தனர்.

இதைத்தொடர்ந்து பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது 360 கிலோ மீட்டர் தூரத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் 4 மணி 20 நிமிடங்களில் கடந்தார். பின்னர் அந்த குழந்தையை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர்.
குழந்தைக்கு தற்போது நிமோனியா காய்ச்சல் இருப்பதால் அந்த காய்ச்சலை குணப்படுத்திய பிறகு ஆப்ரே‌ஷன் செய்ய இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குழந்தையை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

கருத்துகள் இல்லை: