புதன், 5 பிப்ரவரி, 2020

திமுகவும் பிரசாந்த் கிஷோரும் .. காலத்தின் தேவையா?

வளன்பிச்சைவளன் : புதிய யுக்திகளே வெற்றியை தந்தன வரலாறு
சொல்லும் பாடம் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து எந்த உயிரியும் வாழ முடியாது அறிவியல் உண்மை ஆரியர்கள் குதிரையோடு வந்தனர்.
அக்குதிரை திராவிடர்களிடம் இல்லாததே திராவிடர்களின் வீழ்ச்சி. ஆங்கிலேயர்கள் பீரங்கியோடு வந்தார்கள் வாளோடும் வில்லோடும் போர் புரிந்த இந்தியர்களை எளிதில் வீழ்த்தினார்கள்.
என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது திமுக நீண்ட வரலாறு கொண்ட இயக்கம் பிரச்சார பலம் பொருந்திய இயக்கம். திண்ணை பிரச்சாரம் பொதுக் கூட்டங்கள் பத்திரிக்கைகள் என மக்களிடம் நெருங்கிச் சென்று வெற்றி பெற்ற வரலாறு கொண்ட இயக்கம்.
ஆனால் இன்று பிரச்சாரம் வேறு பரிமணாமங்களோடு நடைபெறுகிறது. இவ்வேளையில் இம்மாற்றங்களுக்கு ஏற்ப திமுகவும் மாறியாக வேண்டிய கட்டாயம். சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்காத பல உயிரினங்கள் அழிந்து விட்டன.
இந்த அறிவியல் உண்மைகளுக்கு ஏற்ப திமுக வும் தனது பிரச்சார யுக்தியை மாற்றிக் கொண்டு ஒரு விளம்பர நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிறுவனம் திமுக தரும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் வேலை. ஆனால் இங்கு ஏதோ திமுக வின் கொள்கை முடிவுகளை எடுக்க இருப்பது போல சித்தரிக்கும் பல விபரீத கற்பனைகள் உலா வருகின்றன.
உத்தரபிரதேசத்தை பஜக கைப்பற்றிய விதம் எப்படி ஏறத்தாழ 60 இடங்களில் வெற்றி பெற வாய்பிருந்த இஸ்லாமியர்கள் எவ்வாறு கோட்டை விட்டனர் பல கூறுகளாக பிரித்து மாயாவதி அகிலேஷ் காங்கிரஸ் என தனித்தனியே பிரித்து வென்றனர்.
தமிழகத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கோடு அமித்ஷாவும் நட்டாவும் பல புதிய திட்டங்கள் தீட்டி உள்ளனர் அவர்கள் திட்டப்படி இங்கு ஊடகங்கள் ரஜினியை அந்த வெத்து வேட்டை மாபெரும் பிம்பமாக்க முயற்சிக்கின்றனர் ரஜினி தும்மினால் விவாத மேடை நடத்த தயாராக உள்ளன.
இப்படியான காலக்கட்டத்தில் இதை முறியடிக்கும் எதிர் பிரச்சாரம் புது யுக்திகளோடு நடைபெற வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அவசியமாகிறது.
ஒன்று மட்டும் உறுதி இந்த நிறுவனத்தால் திமுக பெரும் பயன் பெற போகிறதா என்ற கேள்விக்கு தேர்தலுக்குப் பிறகே விடை கிடைக்கும். இந்த நிறுவனத்தால் எதிர் தரப்பினர் பலனடையாமல் தடுத்தது வெற்றியே.
மக்கள் நலக்கூட்டணி போல் திமுகாவிற்கு எதிர் நிலை எடுத்தால் அது இனி பஜகாவிற்கு சாதகமாக அமையும் இன்றைய அவலங்களுக்கு முழுப்பொறுப்பு மக்கள் நலக் கூட்டணியின் தவறான முடிவே
விழிப்போடு இருப்பது நமது கடமை.

கருத்துகள் இல்லை: