Farm to Table :
நாம் முப்பத்திரண்டு(32) தடவை நன்கு மென்று சாப்பிடுகிறோமா?
மனசு நிறைந்து சாப்பிடுவதற்கு பதிலாக வயிறு நிறைய கொட்டிக்
கொள்வதனாலேயே உடற்பருமன் அதிகரிப்பதில் இருந்து தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாக்கப்படுகிறோம். பல்வேறுபட்ட உயிர்கொல்லி நோய்களுக்கு பயந்து Superfoodகளை தேடி அலைவதுமல்லாமல் தேவையில்லாமல் அதிக பணத்தையும் விரயம் செய்கிறோம். ஆனால் ஆரோக்கிய உணவு முறை என்பது அவற்றை நாம் எப்படி தயார் செய்கிறோம் மற்றும் எப்படி உண்கின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது.
உணர்ச்சி வயத்தால் அதிகம் சாப்பிடுதல் (emotional eating):
சலிப்பு, தனிமை, கவலை போன்ற விடயங்களால் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளவர்கள் அதனை போக்க தம்மை அறியாமலே அதிகமாக சாப்பிட்டுக்கொள்வர். இந்த பிரச்சனை குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் அதிகம். அவர்கள் வீட்டில் இருந்தாலும் சும்மா இருப்பதில்லை. ஆனால் தனிமை, மீண்டும் மீண்டும் ஒன்றையே திரும்பத்திரும்ப ஒவ்வொருநாளும் செய்யவேண்டிய சலிப்பான வாழ்க்கை மற்றும் புதிய விடயங்களை அறிந்து கொள்ள முடியாமல் முடங்கிக் கிடக்கும் சூழல் என்பன பெண்களை பாதிக்கும் விடயங்கள். இதற்காக தனியாக ஒரு பதிவு போடவேண்டிய தேவையுண்டு.
Superfood என்றால் என்ன?
Superfood என்பது சம்பந்தம் இல்லாமலே மற்ற உணவுகளோடு ஒப்பீடு செய்து அதிக சத்துக்கள் உண்டு, அதிக மருத்துவ குணங்கள் உண்டு மற்றும் அதிக நோய் எதிர்ப்பு சக்திகள் உண்டென்று விளம்பரம் செய்து மிக அதிகவிலையில் விற்பனை செய்வதற்கான ஒரு வியாபாரத் தந்திரம் மட்டுமே. அவற்றில் முருங்கையிலைப் பொடி, டிராகன் பழம், green tea, ஒலிவ எண்ணெய், சோற்றுக் கத்தாளை (aloe vera) என்று காலத்துக்கு காலம் புதிதாக ஒன்று வந்துக்கிட்டே இருக்கும். ஆனால் நாம் வழமையாக சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களான கடுகு, சீரகம், மிளகு, மல்லி, வெங்காயம், மிளகாய், வெள்ளைப்பூண்டு மற்றும் இஞ்சி போன்றவற்றின் நற்பயன்களை முழுமையாக அடைவதில்லை.
முப்பத்திரண்டு(32) தடவை நன்கு மென்று சாப்பிடனும் என்பதை எங்களுக்கு சிறுவயதிலேயே சொல்லித்தந்துள்ளார்கள். ஆனால் அதை செய்யப் பழக்கப்பட்டுள்ளோமா?
நாம் உட்கொள்ளும் உணவுகள் நன்கு சரிமானம் அடைய அந்த உணவு முழுமையாக அரைக்கப் பட்டிருத்தல் வேண்டும். அப்போதுதான் எமது சிறுகுடலால் சத்துக்களை உறிஞ்சிக் கொள்ள முடிகிறது. எமது வயிற்றினுள் கிரைண்டர் கிடையாது. ஆதலால் அரைக்கப் படாத முக்கியத்துவம் வாய்ந்த சத்துள்ள உணவுகள் பல அப்படியே கழிவறையை சென்றடைகிறது.
நாம் உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிடும்போது அவை செரிமானத்துக்கு ஏதுவாக அமைவது மாத்திரம் அல்லாமல் சாப்பிட்டது போதும் என்கின்ற தூண்டுதலை எமது மூளை தானாகவே ஓமோன்கள் மூலம் வழங்கி, அதிகமாக தின்னும் பேராசையை கட்டுப்படுத்தி விடுகின்றது. அதனால் நாம் மேலதிகமாக சப்பிட்டுக்கொல்வது தடைபடுகிறது. ஆகவே நாம் முப்பத்திரண்டு(32) தடவை நன்கு மென்று சாப்பிடுவதன் மூலம் எமது உடலுக்கு மேலும் அதிக ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது, உடல் எடை மற்றும் கட்டான உடல் பாதுகாக்கப் படுகிறது, உணவு விரயம் செய்தல் குறைகிறது, வைத்திய செலவு மிகப் பெரியளவில் குறைவடைகிறது.
முப்பத்திரண்டு(32) தடவை என்பது ஒரு மாஜிக் இலக்கம் மட்டுமே. நன்றாக அரைக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட இட்லியையும் சட்னியையும் முப்பத்திரண்டு தடவை மெல்லுவது முடியாத காரியம். அதனால் இலகுவாக விழுங்கி அதிகமாக சாப்பிடும் சாத்தியங்கள் அதிகம். ஆகவே நாம் ஒன்றாக சேர்த்து சாப்பிடும் உணவுகள் வாயில் போட்டு மெல்லும் வகையில் அமைதல் அவசியம்.
Farm to Table மூலம் பல ஆரோக்கியமான உணவுத் தாயாரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ள உள்ளதால் அவற்றை எப்படி நாம் சாப்பிடனும் என்கின்ற அறிவும் கட்டுப்பாடும் அவசியமாகிறது.
பின்குறிப்பு: உணவை வாயில் போட்டு அரைக்கும் அதேசமயம் அடுத்த ரவுண்டுக்கு கையை கோப்பையில் வைத்து பிணைந்துகொண்டிருக்காமல், முற்றாக விழுங்கிய பின்னர் அதை ஆரம்பிக்கவும். சாப்பிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக