ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு: குணசேகரனை தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள்.. போக்சோ கோர்ட் அதிரடி


/tamil.oneindia.com/- சென்னை: 11 வயது சிறுமியை.. அயனாவரத்தில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் பல நாட்களாக.. 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 15 பேர் குற்றவாளிகள் என போக்சோ கோர்ட் அறிவித்துள்ளது. 
. ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், குணசேகரன் என்பவரை இந்த வழக்கில் இருந்து கோர்ட் விடுவித்து உத்தரவிட்டுள்ளது
தமிழக மக்களால் இன்னமும் மறக்க முடியாத, நினைத்தாலே நெஞ்சில் ஈட்டியால் குத்தக்கூடிய சம்பவம் என்றால் அது அயனாவரம் சிறுமியின் கொடூரம்தான்.. வாய் பேச முடியாத.. காது கேளாத சிறுமி.. வயசு வெறும் 11தான்!
கடந்த 2018, ஜூன் மாதம் இந்த சம்பவம் வெளியே வந்தது.. ஸ்கூலுக்கு போகும்போதும், வரும்போதும் லிப்டை பயன்படுத்தும்போது, லிப்ட் ஆபரேட்டர்தான் இந்த காம செயலுக்கு வித்திட்டவன்.. சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது மொட்டைமாடி, லிப்ட், டாய்லேட், ஜிம் என மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சீரழித்துள்ளான்.
அந்த லிப்ட் ஆபரேட்டருக்கு வயது 66. பெயர் ரவிக்குமார்!
பேத்தி வயதுடைய அந்த சிறுமியை சின்னாபின்னமாக்கியதோடு அவரை ஆபாசமாக தனது செல்போனில் படம் பிடித்து நினைத்தபோதெல்லாம் வீடியோவை காண்பித்து சிறுமியை சீரழித்துள்ளார். மேலும் அங்கு பணிபுரியும் பிளம்பர் உட்பட தனது சகாக்களிடமும் அந்த வீடியோவை காண்பித்து வக்கிரத்தில் ஈடுபட வைத்தான் ரவிக்குமார்.. மயக்க ஊசி போட்டும், போதை ஊசி போட்டும் கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டது அந்த கும்பல்!


 தனக்கு வயிற்று வலி என்று குழந்தை அடிக்கடி சகோதரியிடம் சொல்லவும்தான், விஷயம் பெற்றோரிடம் கொண்டு செல்லப்பட்டு அதிர்ந்து போனார்கள்.. பிறகு அயனாவரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தரப்பட்டது.. 
இதையடுத்து அந்த அப்பார்ட்மென்ட்டில் வேலை பார்த்த வாட்ச்மேன், தண்ணீர் கேன் போடுபவர், லிப்ட் ஆப்ரேட்டர், வீட்டு வேலை செய்பவர் என 25வயது முதல் 66 வயது வரை உள்ள மொத்தம் 17பேரை போலீசார் அள்ளியது. முதல் குற்றவாளி லிப்ட் ஆபரேட்டர் ரவிகுமார்தான். 
அடுத்து, சுரேஷ் 32, ராஜசேகர் 48, எரால்பிராஸ் 58, அபிஷேக் 28, சுகுமாரன் 60, முருகேசன் 54, பரமசிவம் 60, ஜெய்கணேஷ் 23, பாபு 36 (இவர் இறந்துவிட்டார்), பழனி 40, தீனதயாளன் 50, ராஜா 32, சூர்யா 23, குணசேகரன் 55, ஜெயராமன் 26, உமாபதி 42 ஆகிய 17 பேர் பேர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டனர். 
இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, மிரட்டல், கொலைமிரட்டல், போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் தொல்லை கொடுத்தது, பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் மட்டும் வழக்கு பதிவு செய்திருந்தது. 
இதனிடையே, 17 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2018, செப்டம்பர் மாதம் 5-ம் தேதி அடைக்கப்பட்டனர். இதைதவிர 2018 செப்டம்பர் 12 ம் தேதி 17 பேர் மீது 300 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். 2018 நவம்பர் மாதம் 13 ம் தேதி, இந்த விசாரணை கோர்ட்டில் நடக்க ஆரம்பித்தது.. சிறுமியின் வாக்குமூலம் பெறப்பட்டது.. கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
இதனிடையே அந்த 17 பேரும் தங்களுக்கு ஜாமீன் கிடைக்க புதுபுது வழிகளில் முயற்சித்தனர்.. ஆனாலும் ஜாமீன் தரப்படவே இல்லை. மொத்த சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.. 120 ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், சிறுமியை நாசம் செய்த சம்பவத்தில் அந்த 17 பேருக்கும் ஆதரவாக யாரும் ஆஜராகமாட்டோம் என்றும் மீறி ஆஜராகும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹைகோர்ட் வக்கீல்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். 
இந்நிலையில், எல்லா விசாரணைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் 2019, டிசம்பர் 6 ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், பிப்ரவரி 1-ம் தேதி அதாவது இன்றைய தீர்ப்பு என்ற தகவல் வெளியானது.. இந்த வழக்கில் சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதின்ற நீதிபதி மஞ்சுளாதான் தீர்ப்பு வழங்குகிறார். 
இந்த நாளில்தான் நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டிருந்தது.. அதே நாளில் இந்த கொடூரர்களுக்கும் தீர்ப்பு என்பதால், அநேகமாக அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட தொடங்கி விட்டது. இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை அடுத்து நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது  /

கருத்துகள் இல்லை: