news18.com :பாமக கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அதிமுக ஆட்சி இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு பா.ம.க கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 80 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வேண்டும், தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தக்கூடாது, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் அவர்களுக்கு காலவரையற்ற பரோல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “மக்களவைத் தேர்தலின்போது 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வந்தது. நாம் கேட்டபோது ஆட்சிக்கு வரவேண்டும் என்றார்கள் அனைத்தையும் விட்டு கொடுத்து விட்டோம். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தால் அரை சீட், கால் சீட் என கெஞ்ச வைப்பது வருத்தமளிக்கிறது. கூட்டணி வைத்ததற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையை மாற்றி கூட்டணிக்குச் சென்றோம். இப்போது நாம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். அதுவும் அந்தந்த மாவட்ட அதிமுக தலைவர்களிடம் சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவது வருத்தமளிக்கிறது. அதிமுக தலைமை எங்களது கருத்துகளை ஏற்று இனி வரும் காலங்களில் அதை சரிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்” என்றார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக