ஞாயிறு, 29 டிசம்பர், 2019

அஸ்ஸாமில் 426 குடும்பங்களின் வீடுகளை இடித்து அவர்களை முகாம்களில்..... அரங்கேறும் நரவேட்டை ..வீடியோ


Saeedhullah : அஸ்ஸாமில் தொடங்கியது நர வேட்டை . தேசியகுடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி மக்கள் கிளர்ச்சி தொடரும் நிலையில் சத்தமில்லாமல் சட்டத்தை இரக்கமின்றி அமுல்படுத்த துவங்கியுள்ளனர்...
முதல் கட்டமாக அஸ்ஸாம் மாநிலம் பிஸ்வனாத் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிந்து வந்த 426 குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டு உடனடியாக அவர்கள் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமக்கப்பட்ட கொடுமைகள் நடந்துள்ளது...
எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத திறந்தவெளி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 426 குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பெண்கள் உள்பட 1800 நபர்கள் தங கள் எதிர்காலம் குறித்த ஏக்கத்துடன் வானத்தை வெறித்து பார்த்தபடி உள்ளனர்...
கடந்த பத்து நாட்களாக இணையதள வசதிகள் துண்டித்த காரணமாக அஸ்ஸாம் அரசின் இந்த நரவேட்டை வெளியுலகிறகு தெரியாமல் இருக்க விசயத்தை கேள்விபட்ட அஸ்ஸாம் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகிகள் காவல் துறை கெடுபிடிகளை மீறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 426 குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி தைரியமூட்டினர் ...

துணைச் செயலாளர் முகமது அகமது சாஹிப் தலைமையில் சென்ற குழுவினர்,குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குளிர்காலத்தில் உடுத்தும் உடைகள் போர்வைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கினர்...
முகாமில் தங்களுக்கு ஒருவேளை உணவு மட்டுமே தருவதாக கூறி கதறியவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜ.இ ஹிந்த் குழுவினர் சட்ட போராட்டங்களை மேற்கொள்வதாக உறுதியளித்து இறைவன் விரைவில் நல்ல தீர்வினை தருவான் என்று நம்பிக்கையூட்டி திரும்பினர்...

கருத்துகள் இல்லை: