சிஏஏ போராட்டத்தில் பங்கேற்ற 18 வயது இளைஞர் படுகொலை..... பீகாரில்
இந்துத்துவா பயங்கரவாதிகள் 6 பேர் கைது!
தீக்கதிர் : பாட்னா: பீகாரில் தேசியக் கொடியை பிடித்தபடி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அமீர்ஹன்ஸ்லா (18) என்ற இளைஞனை இந்துத்துவா கும்பல் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளது.குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக, பீகாரின் புல்வாரி ஷரீப் பகுதியில் டிசம்பர் 21ஆம் தேதி,ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் 18 வயது இளைஞரான அமீர் ஹன்ஸ்லாவும் பங்கேற்றார். கையில்
தேசியக் கொடியை பிடித்தபடி அவர் முழக்கங்களை எழுப்பினார். ஆனால், போலீசார்,
இப்போராட்டத்தில் வன்முறை யைக் கையாண்டு கூட்டத்தை நாலாபுறமும்
விரட்டியடித்தனர்.இதனிடையே, போராட்டத்திற்குச் சென்ற அமீர் ஹன்ஸ்லா
மறுபடியும் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவரைப் பல இடங்களிலும்
தேடிப்பார்த்த பெற்றோர், இறுதியில் போலீசில் புகார் செய்தனர்.இந்நிலையில்,
10 நாட்களுக்குப் பின், அமீர் ஹன்ஸ்லாவின் உடல்தற்போது போலீசாரால்
கண்டெடுக்கப் பட்டு உள்ளது.
மேலும், அமீர் ஹன்ஸ்லா அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பதும்; ‘இந்து புத்ரா சங்காதன்’, ‘இந்து சமாஜ் சங்காதன்’ உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர்தான், அமீர் ஹன்ஸ்லாவை கொன்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இது பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட 6 பேரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறையில் ஈடுபட வேண்டும்என்று வீடியோ பதிவுகளை வெளி யிட்ட மேலும் 2 இந்துத்துவா பயங்கர வாதிகள் மீதும் பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக